ஆதி ஜெகநாத பெருமாள் கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம்..

ராமநாதபுரம் திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.
ஆதி ஜெகநாத பெருமாள் கோவில் சித்திரை திருவிழா  தேரோட்டம்..

108 திவ்யதேசங்களில் 44வது புண்ணியத் தலமாக விளங்கும் ராமநாதபுரம் திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம் நடைபெற்றது. கடுமையான வெயிலிலும் ஏராளமான பக்தர்கள் தேர் வடம் பிடித்து இழுத்தனர்.

ராமநாதபுரம் திருப்புல்லாணியில் ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட ஆதி ஜெகநாத பெருமாள் கோவிலில் பட்டாபிஷேக அருள்மிகு பட்டாபிஷேக ராமர் சைத்ரோத்ஸவப் பெருவிழா கடந்த 6ஆம் தேதி தொடங்கியது விழாவின் முக்கிய நிகழ்வான ஒன்பதாம் நாள் திருநாள் தேரோட்டம் நடைபெற்றது.

திருப்புல்லாணி மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் ஏராளமானோர் தேர் வடம் பிடித்து இழுத்தனர். கோவிந்தா கோவிந்தா என்ற கோஷங்களுடன் தேர் நான்கு ரத வீதிகளில் வலம் வந்தது. பட்டாபிஷேக ராமர், லெட்சுமணன், சீதாதேவி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

ராமநாதபுரம் சமஸ்தான திவான் பழனிவேல் பாண்டியன் தலைமையில். விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டு பாதுகாப்பிற்காக ஏராளமான போலீசார் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன.

முன்னதாக தேர் புறப்பட தயாராக இருந்த நிலையில் தேர் பாதுகாப்பாக செல்லவும், வேகத்தை கட்டுப்படுத்தவும் தேரின் சக்கரத்தில் தடுப்பு கட்டை போடப்படும். தடுப்பு கட்டை போடுவதில் சிரமம் ஏற்பட்டதால் தேரை இழுத்து செல்வதில் தாமதம் ஏற்பட்டது. அக்னி நட்சத்திர வெயில் தாக்கம் அதிக அளவில் இருந்ததால் காலில் செருப்பு அணியாமல் தேரை வடம்பிடித்து இழுக்கும் பெண்கள், குழந்தைகள் சிரமப்பட்டனர்.

கொளுத்தும் வெயிலை பொருட்படுத்தாமல் கோவிந்தா கோஷங்களுடன் பக்தர்கள் தேரை வடம்படித்து இழுத்தனர். கீழக்கரை வட்டாசியர் சரவணன்,திருப்புல்லாணி ஒன்றிய பெருந்தலைவர் புல்லாணி, பேஷ்கார் கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com