பெண்ணின் புகைப்படத்தை எடுத்து மார்பிங் செய்துவிட்டுவதாக மிரட்டல்....

சென்னையில் பெண்ணின் வாட்ஸ்-ஆப் புகைப்படத்தை எடுத்து ஆபாசமாக மார்ஃபிங் செய்து இணையத்தில் வெளியிடாமல் இருக்க பணம் கேட்டு மர்ம நபர் மிரட்டுவத்காக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
பெண்ணின் புகைப்படத்தை எடுத்து மார்பிங் செய்துவிட்டுவதாக மிரட்டல்....

சென்னை அயனாவரம் பகுதியைச் சேர்ந்த இருசக்கர வாகன உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வரும் வியாபாரி ஒருவர் அயனாவரம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.

அப்புகாரில் தான் தனது மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை செல்போன் வாட்ஸ்-ஆபில் வைத்திருந்தத நிலையில், அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவரிடம் இருந்து தனது வாட்ஸ்-ஆப் எண்ணிற்கு தனது மனைவியின் புகைப்படத்தை ஆணின் நிர்வாண உடலுடன் இணைத்தது போன்ற ஆபாசப் புகைப்படங்கள் தொடர்ந்து வந்ததாக தெரிவித்துள்ளார்.

மேலும், அதைக் கண்டு அதிர்ச்சியடைந்த தான் அந்த எண்ணிற்கு தொடர்புகொண்டு பேசியதாகவும், அப்போது மறுமுனையில் பேசிய மர்ம நபர் ஒருவர், இப்புகைப்படங்களை இணையதளத்தில் பதிவேற்றாமல் இருக்க தனக்கு பணம் தர வேண்டும் எனவும், மாறாக பணம் தர மறுத்தாலோ, தன்னை பிளாக் செய்தாலோ தனது மனைவியின் அனைத்து ஆபாசப் புகைப்படங்களையும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்துவிடுவதாக மிரட்டல் விடுத்ததாக தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் இச்சம்பவத்தால் தனது மனைவி மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாகவும், தனது மனைவியின் புகைப்படத்தை ஆபாசமாக மார்ஃபிங் செய்து பணம் கேட்டு மிரட்டும் நபரை கணடறிந்து அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்கும்படியும் அயனாவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

சைபர் குற்றவாளிகள் பணத்தை பறிக்க பல வழிகளில் திட்டம் தீட்டி பொதுமக்களை ஏமாற்றி வரும் நிலையில், பொதுமக்கள் தங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்து புகார் அளிக்க தயங்க வேண்டாம் என காவல்துறை சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com