மதுபோதையில் பாட்டியை கொலை செய்த இளைஞன்... சென்னை ஆதம்பாக்கத்தில் பரபரப்பு!!

சென்னை ஆதம்பாக்கம் அருகே 64 வயது பாட்டியை வெட்டி படுகொலை செய்த விக்னேஷ் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
மதுபோதையில் பாட்டியை கொலை செய்த இளைஞன்... சென்னை ஆதம்பாக்கத்தில் பரபரப்பு!!

சென்னை ஆதம்பாக்கம் டாக்டர் அம்பேத்கர் நகர் 2வது தெருவை சேர்ந்தவர் 64 வயதுடைய வேலாத்தா. அதே தெருவைச் சேர்ந்தவர் குமார் என்பவரின் மகன்விக்னேஷ். இவர் வயதான பாட்டியின் காதை அறுத்து நகை திருடியது, தனது தந்தையையே கொலை செய்தது போன்ற தொடர் குற்றங்களில் ஈடுபட்டதால் குண்டர் தடுப்புச் சட்டம் காவலில் இருந்தார். கடந்த 6 மாதத்திற்கு முன்பு தான் சிறையிலிருந்து வெளி வந்துள்ளார்.

இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த ஆஷாவின் மகள் ஆர்த்தியிடம் கடந்த 5 மாதத்திற்கு முன்பு தகராறில் ஈடுபட்டு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று நள்ளிரவு சரியாக 10 மணி அளவில் ஆஷா மற்றும் அவரது மகள் ஆர்த்தியிடம் மீண்டும் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது வேலாத்தா விக்னேஷிடம் ஏன் இதுபோன்று சண்டை இடுகிறாய் என்று கேட்டிருக்கிறார்.

போதை தலைக்கேறிய நிலையில் கையில் பட்டா கத்தியுடன் நின்றிருந்த விக்னேஷ் வேலாத்தாவை சரமாரியாக வெட்டி படுகொலை செய்தார். இதையடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com