மனைவியை பீர் பாட்டிலில் தாக்கிய கணவர்... அடுத்து என்ன நடந்தது?

மனைவி மீது ஏற்பட்ட சந்தேகத்தால் கணவன் மனைவியை பீர் பாட்டிலால் அடித்து தப்பி ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
மனைவியை பீர் பாட்டிலில் தாக்கிய கணவர்... அடுத்து என்ன நடந்தது?

சென்னை நங்கநல்லூர் தில்லைகங்கா நகர் 2வது பிரதான சாலையில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் கமலக்கண்ணன். இவர் வினிதா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி நான்கு வருடங்கள் ஆன நிலையில் அவர்களுக்கு 10 மாதத்தில் பெண் குழந்தை ஒன்று உள்ளது.

கமலக்கண்ணன் அரிசி மாவு வியாபாரம் செய்து வருகின்றார். திருமணமாகிய நாளில் இருந்தே கணவன் மனைவி இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. அந்த வகையில் சம்பவம் நிகழ்ந்த அன்றும் சண்டை ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த கணவர் வீட்டில் வைத்திருந்த பீர் பாட்டிலை எடுத்து வினிதாவின் தலையில் அடித்துள்ளார்.

இதில் வினிதா பலத்தகாயம் அடைந்தார். இதை அடுத்த வீட்டிலிருந்து தப்பி சென்றுள்ளார். வினிதாவின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் சம்பவம் குறித்து ஆதம்பாக்கம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

அதன் அடிப்படையில் சம்பவ நடந்த இடத்திற்கு சென்ற போலீசார் உடனே 108 ஆம்புலன்ஸ் மூலம் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் தப்பி ஓடிய கமலக்கண்ணன் போலீசார் தேடி வருகின்றனர். இதுக்குறித்த விசாரணையில் வினிதா அடிக்கடி போனில் போசி கொண்டு இருப்பதைக் கண்டு மனைவி மீது ஏற்பட்ட சந்தேகத்தால் கணவன் பீர் பாட்டில் அடித்தது தெரியவந்துள்ளது.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com