வேலை பார்த்த கடையிலேயே திருடிய ஊழியர் ... கொஞ்ச நஞ்சம் அல்ல... ரூ.26 லட்சம்...

சரவணா ஸ்டோர்ஸ் எலைட் தங்க நகைகடையில் ரூ. 26 லட்சம் தங்க நகைகளை சிறிது சிறிதாக திருடி அடகு வைத்த ஊழியரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
வேலை பார்த்த கடையிலேயே திருடிய ஊழியர் ... கொஞ்ச நஞ்சம் அல்ல... ரூ.26 லட்சம்...

சென்னை தி.நகர் துரைச்சாமி சாலையில் செயல்பட்டு வரும் பிரபல நகைக்கடை சரவணா ஸ்டோர்ஸ் எலைட் தங்க நகைக்கடை. இந்த கடையில் நெல்லை பாளையங்கோட்டை சமாதான புரத்தைச் சேர்ந்த ஐசக் சாமுவேல் என்பவர் ஆன்லைன் புக்கிங் மற்றும் டெலிவரி பிரிவு பொறுப்பாளராக கடந்த 3 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார்.

இந்தநிலையில் கடந்த மாதம் நகைக்கடையில் வரவு-செலவு தொடர்பாக தணிக்கை நடைபெற்றுள்ளது. இதில் 625 கிராம் எடை கொண்ட ரூ. 26 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் குறைந்ததுள்ளது தெரிய வந்தது.

அப்போது சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது ஐசக் சாமுவேல் திருடியதை கண்டுபிடித்துள்ளனர். ஐசக் தான் சிக்கி கொள்வோம் என பயந்து உடல்நிலை சரியில்லை எனக் கூறி விடுப்பில் சென்று விட்டார்.

இதையடுத்து நகைக்கடை மேலாளர் ராமமூர்த்தி மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். புகாரின் பேரில் மாம்பலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

தலைமறைவாக இருந்த ஊழியர் ஐசக் சாமுவேலை மாம்பலம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பட்டதாரி இளைஞர் ஐசக் சாமுவேல் சிறு வயது முதல் மும்பையில் பெற்றோருடன் வசித்து வந்துள்ளார்.

நகைக்கடை உரிமையாளருக்கு வேண்டப்பட்ட தனது உறவினர் ஒருவர் மூலம் நகைக் கடையில் பணிக்கு சேர்ந்துள்ளார்.

சிறுவயது முதலே ஆடம்பரமாக வாழ்ந்து வந்த ஐசக் சாமுவேல் கொரோனா ஊரடங்கு காலத்தில் நண்பர்கள் பலரிடம் கடன் வாங்கியுள்ளார். அதை திருப்பி செலுத்தவும், ஆடம்பரமாக தொடர்ந்து செலவு செய்வதற்கும் நகைகளை திருடியது போலீஸ் விசாரணையில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

நகைக்கடையில் திருடிய நகைகளை, ரூபாய் 20 லட்சத்துக்கு அடகு வைத்து கடன்காரர்களுக்கு கொடுத்ததுடன் மீதி பணத்தை ஜாலியாகவும் செலவு செய்துள்ளதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதையடுத்து அடகு வைத்த கடையிலிருந்து, ஐசக் சாமுவேல் அடமானம் வைத்த நகையை போலீசார் மீட்டனர். இதையடுத்து ஐசக் சாமுவேலை மாம்பலம் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com