வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே அண்மையில் சுவற்றை துளையிட்டு கொள்ளை நடந்த அதே அரசு டாஸ்மாக் கடையில் மீண்டும் அதுபோன்றததொரு நிகழ்வு அரங்கேறியுள்ளது.
காட்பாடி அருகேயுள்ள கசம் என்ற பகுதியில் அரசு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. ஊரடங்கு காரணமாக இந்த கடை மூடப்பட்டிருந்த நிலையில், அதனை பயன்படுத்தி கொள்ள நோட்டமிட்ட மர்மநபர்கள், நேற்று கடையின் பின்பக்க சுவற்றை துளையிட்டுள்ளனர். தொடர்ந்து உள்ளே புகுந்த அவர்கள் காலி பெட்டியை கொண்டு சிசிடிவி கேமராவை மூடியுள்ளனர். பின்னர் தங்கள் இஷ்டத்துக்கு ஏற்றபடி,
பலலட்சம்மதிப்புள்ள மதுபாட்டில்களை கொள்ளையடித்ததுடன், அருகே இருந்த முட்புதரில்மதுபெட்டிகளை பதுக்கி வைத்து சென்றுள்ளனர். இதனை பார்த்த அப்பகுதி மக்கள் பெட்டியையும், பாட்டில்களையும் அள்ளிசென்றனர்.
நிகழ்விடத்துக்கு வந்து போலீசார்விசாரித்தபோது, அந்த அல்டி மேட்கொள்ளையர்கள் சிசிடிவியின் Hard Disk-ஐயும் கழட்டி எடுத்து சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து காட்பாடி காவல்துறையினர் வழக்குப்பதிவுசெய்து கொள்ளையர்களை தேடிவருகின்றனர். இதேகடையில்தான் கடந்த மாதம் சுவற்றில் துளையிட்டு கொள்ளை நடந்திருக்கிறது. அந்த கும்பலையே இன்னும் கண்டுப்பிடிக்காத நிலையில், மீண்டும் இதே கடையில் கொள்ளை அரங்கேறியுள்ளது காவல்துறையினர் அதிர்ச்சியில் உறையவைத்துள்ளது.