பள்ளி ஆசிரியை வீட்டில் கைவரிசை... 50 பவுன் நகை கொள்ளை

சென்னையில் பள்ளி ஆசிரியை வீட்டின் பூட்டை உடைத்து 50 சவரன் தங்க நகைகள், பணத்தை கொள்ளையர்கள் கொள்ளை அடித்துள்ளனர், இது தொடர்பாக காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
பள்ளி ஆசிரியை வீட்டில் கைவரிசை... 50 பவுன் நகை கொள்ளை

சென்னை வில்லிவாக்கம் வடக்கு திருமலை நகரைச் சேர்ந்தவர் பிரிய பிரசாத்.

இவர் அண்ணா நகரில் உள்ள ஜெயகோபால் கரோடியா பள்ளியில் 22 ஆண்டுகளாக ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு ஷாம் பிரசாத் மற்றும் அர்ஜுன் பிரசாத் என இரண்டு மகன்கள் உடன் உள்ளனர். நேற்று பள்ளிக்கு பிரிய பிரசாத் சென்று விட்டார்.

இவருடைய மகன் அர்ஜுன் பிரசாத் நேற்று வீட்டை பூட்டிவிட்டு வெளியில் சென்று விட்டார். இதையடுத்து மீண்டும் வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. வீட்டிற்குள் சென்று பார்த்த போது வீட்டில் இருந்த பீரோவை திறந்து கிடந்தது.

பீரோவில் வைத்திருந்த 50 சவரன் தங்க நகைகள் ரூ. 20 ஆயிரத்தை யாரோ சாவியால் பிரோவை திறந்து கொள்ளையடித்து சென்று விட்டனர்.

அதிர்ச்சியடைந்த அர்ஜூன் தனது தாயாருக்கு தெரிவித்தார். அவர் இந்த கொள்ளை தொடர்பாக ஐசிஎப் போலீசாரிடம் புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

கைரேகை நிபுணர்கள் பதிவாகி உள்ள ரேகைகளையும், தடயங்களையும் பதிவு செய்து சென்றனர். மேலும் அதே பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஐசிஎப் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com