மனநலம் பாதிக்கப்பட்ட பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொலை... சிறுவன் உட்பட இருவர் கைது!!

தேனி கூடலூரில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை கற்பழித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மனநலம் பாதிக்கப்பட்ட பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொலை... சிறுவன் உட்பட இருவர் கைது!!

தேனி மாவட்டம் கூடலூரில் கடந்த 16ம் தேதி தனியார் திரையரங்கு அருகே மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் அரை நிர்வாணமாக இறந்து கிடப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் விரைந்து சென்ற காவல்துறையினர் அரை நிர்வாணமாக கிடந்த பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காவல்துறையினர் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் 302 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணையில் கொலை செய்யப்பட்ட பெண் மனநலம் பாதிக்கப்பட்டு அதே பகுதியில் சுமார் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக சுற்றித் திரிந்தவர் என்றும், 50 வயது மதிக்கத்தக்க மனநிலை பாதிக்கப்பட்ட பெண் மயில் என்பதும் தெரியவந்துள்ளது.

அரை நிர்வாணமாக பெண்ணின் உடல் காணப்பட்டதால், பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். அதன் அடிப்படையில், சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்து சிறிது தொலைவில் உள்ள பெட்ரோல் பங்கில் உள்ள சிசிடிவி கேமரா பதிவை போலீசார் ஆய்வு செய்தனர்.

அப்போது சரியாக இரவு 12.41 மணிக்கு அந்த வழியாக தனியாக ஒரே ஒரு நபர் மட்டும் சந்தேகப்படும் படி சென்றுள்ளார். உடனடியாக காவல்துறையினர் அந்த நபரை கண்டுபிடித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். தொடர் விசாரணையில் அவரும் அவரது 17 வயது நண்பரும் சேர்ந்து மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை கற்பழித்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

25 வயதாகும் அரவிந்து குமாரும் 17 வயது சிறுவனும் ஒன்றாக கூலி வேலைக்கு செல்வோர். இருவரும் தினசரி கூடலூர் பகுதியில் உள்ள ஒட்டங்குளம் கரையோரம் மது அருந்துவதை வழக்கமாக வைத்துள்ளனர். இருவரும் மது போதையில் பெண்ணை கற்பழிக்க வேண்டும் என்று நினைத்து திட்டம் தீட்டியுள்ளனர்.

இருவரும் மது அருந்தும் ஒட்டன் குளம் அருகே உள்ள தனியார் திரையரங்கம் அருகே 50 வயதாகும் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணான மயில் தினசரி இரவு அங்கே தூங்குவதைக் கண்டு நோட்டமிட்டும் உள்ளனர்.

இவர் தினசரி இரவு தனியார் திரையரங்கம் எதிரே உள்ள இருசக்கர வாகனம் சரி செய்யும் கடை முன்பு தூங்கிவிட்டு பகல் நேரத்தில் கடை திறந்தவுடன் வேறு இடத்திற்கு சென்று விடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

இதனை நோட்டமிட்ட அரவிந்த் குமார் மற்றும் 17 வயது சிறுவன், சம்பவம் நடைபெறுவதற்கு முன்பு இரண்டு மூன்று முறை அப்பெண்ணிடம் தவறாக நடந்து கொள்ள முயன்று உள்ளனர்.

சம்பவம் நடந்த அன்று இரவு அரவிந்த் குமார் மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோருக்கு மது போதை தலைக்கேறியதில், இன்று அப்பெண்ணை கற்பழித்து விட வேண்டும் என்று முடிவு செய்து இரவு நேரத்தில் தனியார் திரையரங்கு அருகே உள்ள நியாய விலை கடைக்கு பின்பு மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை கூட்டி சென்று அப்பெண் வைத்திருந்த கட்டையால் அப்பெண்ணின் பின் தலையில் கனமாக அடித்துள்ளனர்.

அடிபட்டதில் மயக்கமடைந்து கீழே விழுந்த பெண்ணை சரமாரியாகத் தாக்கியும் உள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே அப்பெண் உயிரிழந்துள்ளார். பின்னர் இருவரும் அப்பெண்ணை கற்பழித்துவிட்டு அரை நிர்வாணமாக அங்கேயே விட்டு விட்டுச் சென்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து இருவரையும் காவல்துறையினர் கைது கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com