அம்பத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் கல்லூரி மாணவர்களை குறி வைத்து கஞ்சா விற்பனை நடைபெற்று வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனால் அங்கு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த ஒரு வீட்டில், சிறு சிறு பொட்டலங்களை வைத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த 5 பேரை போலீசார் கைது செய்த நிலையில் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அதில், ஆந்திர மாநிலத்தில் இருந்து வாரம்தோறும் கஞ்சா ஏற்றுமதி செய்யப்படுகிறது என்றும், புழல் பகுதியில் மறைமுகமாக கல்லூரி மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருவதாகவும் வாக்குமூலம் அளித்தனர். கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்த போலீசார், 5 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.