சர்வதேவ கபடி வீரர் சந்தீப் சிங் சுட்டுக் கொலை!

சர்வதேச கபடி வீரர் சந்தீப் சிங் நங்கல் பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் உள்ள மாலி கிராமத்தில் திங்கள்கிழமை சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
சர்வதேவ கபடி வீரர் சந்தீப் சிங் சுட்டுக் கொலை!

40 வயதான சர்வதேச கபடி வீரர் சந்தீப் சிங் நங்கல் அம்பியன், நகோடரில் உள்ள மல்லியன் குர்த் கிராமத்தில் ஆயுதமேந்திய நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

ஜலந்தர் மாவட்டத்தில் உள்ள மாலியன் கிராமத்தில் நடந்த போட்டியின் போது இந்த கொலைவெறித் தாக்குதல் நடைபெற்றது.

ஆதாரங்களின்படி, நான்கு-ஐந்து நபர்கள், சந்தீப் நங்கலை பதுங்கியிருந்து துப்பாக்கியால் சுட்டனர். அவரது தலை மற்றும் மார்பில் சுமார் 20 ரவுண்டுகள் குண்டுகள் பாய்ந்தன.

இந்த சம்பவம் குறித்து போலீசார் இன்னும் எந்த தகவலையும் வழங்கவில்லை. அவர் பெரிய லீக் கபடி கூட்டமைப்பை கவனித்து வருவதாகவும், அவருக்கும் கூட்டமைப்பிற்கும் அல்லது கிளப்புகளுக்கும் இடையே பிளவு ஏற்பட்டிருக்கலாம் என்றும் நெட்டிசன்கள் ஊகிக்கின்றனர்.

தொழில்முறை கபடி வீரர் மற்றும் ஸ்டாப்பர் நிலையில் விளையாடி வந்த சந்தீப், மாநில அளவிலான போட்டிகளில் விளையாடி தனது வாழ்க்கையைத் தொடங்கினார். ரசிகர்களால் 'கிளாடியேட்டர்' என்று அழைக்கப்பட்டவர் சந்தீப்.

கனடா, அமெரிக்கா, இங்கிலாந்து, பஞ்சாப் தவிர மற்ற நாடுகளில் விளையாடினார். அவர் தனது வாழ்வின் உயிர்மூச்சாக நினைத்த விளையாட்டுப்

போட்டியின்போதே, மைதானத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

அவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர். சந்தீர் சிங் நங்கல், குடும்பத்தினருடன் இங்கிலாந்தில் வசித்து வந்தார்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com