அஞ்சல் ஊழியர் பணி, சி.ஆர்.பி.எஃப், இந்தியன் ஆயில் உள்ளிட்ட பல மத்திய அரசின் நிறுவனங்களில் தமிழ்நாட்டு பணிக்கு சேர வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் 200 க்கும் அதிகமானோர் போலி மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கியது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
இதை அடுத்து யுபிஎஸ்சி தந்த ஆவணங்களை சரிபார்த்த, அரசுத் தேர்வுகள் இயக்ககம், சம்மந்தப்பட்ட சான்றிதழ்கள் போலி என்று உறுதி செய்துள்ளது. இதை அடுத்து போலி சான்றிதழ் தந்த நபர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க, அரசுத் தேர்வுகள் இயக்ககம் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.