பட்டப்பகலில் ஓட ஓட விரட்டி கொலை... சிசிடிவி காட்சி வெளியீடு

சென்னை அமைந்தகரையில் பட்டப்பகலில் ஓட ஓட விரட்டி கொலை செய்த பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.
 பட்டப்பகலில் ஓட ஓட விரட்டி கொலை... சிசிடிவி காட்சி வெளியீடு

சென்னை அமைந்தகரை செனாய் நகர் மெட்ரோ ரயில் நிலையம் அருகே கடந்த 18ஆம் தேதி பட்டப்பகலில் 6 பேர் கொண்ட கும்பல் ஒன்று ஓட ஓட விரட்டி ஒரு நபரை கொலை செய்தனர்.

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த கொலை குறித்து போலீசார் விசாரணை நடத்திய போது, சேத்துப்பட்டு பகுதியை சேர்ந்த ஆறுமுகம்(36) நிதி நிறுவன அலுவலகத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்ற போது பின் தொடர்ந்து வந்த ஆறு பேர் கொண்ட கும்பல் வழிமறித்து கொலை செய்துவிட்டு தப்பியோடியது தெரியவந்தது.

ஏற்கனவே இறந்த ஆறுமுகம் மீது கொலை வழக்கு உட்பட பல வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது.

இதுதொடர்பாகஅமைந்தகரைபோலீசார்கொலைவழக்குபதிவுசெய்துதப்பியோடியஆறுபேர்கொண்டகும்பலைதனிப்படைஅமைத்துதேடிவந்தனர். இந்நிலையில்நேற்றுஆறுமுகத்தைகொலைசெய்ததாககள்ளக்குறிச்சிநீதிமன்றத்தில்சென்னைசெனாய்நகரைசேர்ந்தரோஹித்ராஜ்(31) மற்றும்சந்திரசேகர் (28) ஆகியஇருவர்சரணடைந்தனர்.

. சரணடைந்த இருவரையும் 15 நாட்கள் சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டது. மேலும் தலைமறைவாகி உள்ள மீதமுள்ள 4 பேரை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் ஆறுமுகத்தை ஓட ஓட வெட்டி கொலை செய்த பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. மூன்று இருசக்கர வாகனத்தில் வந்த ஆறு பேர் கொண்ட கும்பல் ஆறுமுகத்தை விரட்டி வந்து, அவர்களது இருசக்கர வாகனத்தை கீழே போட்டு கத்தியால் வெட்டி கொலை செய்துவிட்டு, மீண்டும் அதே இருசக்கர வாகனத்தில் தப்பி செல்வது போன்ற காட்சிகள் பதிவாகி உள்ளது. குறிப்பாக பொதுமக்கள் முன்னிலையிலேயே சர்வசாதாரணமாக கும்பல் வெட்டி தப்பி செல்வது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com