ஆயுர்வேத மருத்துவ மாணவி உயிரிழந்த விவகாரம்… கணவரே குற்றவாளி என நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!!

ஆயுர்வேத மருத்துவ மாணவி விஸ்மயா உயிரிழந்த விவகாரத்தில் அவரின் கணவரே குற்றவாளி என கொல்லம் கிழமை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
ஆயுர்வேத மருத்துவ மாணவி உயிரிழந்த விவகாரம்… கணவரே குற்றவாளி என நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!!

கேரள மாநிலத்தில் கடந்த ஆண்டு ஆயுர்வேத மருத்துவ மாணவி ரப்பர் தோட்டம், 100 பவுன் நகை, ரொக்கம் என சகல வரதட்சிணைகளுடன் திருமணம் செய்து கொடுக்கப்பட்ட ஒரு வருடத்தில் வரதட்சிணை கொடுமை காரணமாக குளியலறையில் இருந்து பிணமாக மீட்கப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

குறிப்பாக கேரள மாநிலத்தின் பெண்கள் வரதட்சிணை கொடுக்க முடியாது என போராட்டம் முன்னெடுக்க தொடங்கினார்கள். இவர்களுக்கு ஆதரவாக பிரபலங்கள் பலரும் ஆதரவு தெரிவிக்க ஒரே நாளில் உயிரிழந்த விஸ்மயா கணவர் கிரண் குமார் கைது செய்யபட்டார். மோட்டார் வாகன உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த கிரண் குமார் கைது செய்யப்பட்ட பிறகு பணியில் இருந்து நீக்கப்பட்டு 1 வருடமாக நீதிமன்ற காவலில் உள்ளார்.

கிரண் குமார் ஜாமீன் கோரிய மனு பலமுறை நிராகரிக்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு மார்ச் மாதம் ஜமீன் வழங்கப்பட்டது. விஸ்மயா உயிரிழந்த வழக்கு கேரள மாநிலம் கொல்லம் கிழமை நீதிமன்றத்தில் நீதிபதி சுஜித் கே.என் அமர்வில் விசாரிக்கப்படு வந்தது. வழக்கின் போது நீதிபதி 42 சாட்சியங்கள், 108 ஆவணங்கள் மற்றும் விஸ்மாய செல்போன் உரையாடல்கள் ஆகியவற்றை விசாரணை அறிக்கையாக ஏற்றுக்கொண்டார்.

குறிப்பாக காவல்துறையினர் 507 பக்கம் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது; இந்த நிலையில் அனைத்து தரப்பு விசாரணைகளும் முடிவடைந்த நிலையில் நீதிபதி இன்று தீர்ப்பு வழங்கினார். அதில், போலிசாரின் சாட்சியங்கள், ஆவங்கங்கள், மருத்துவ பரிசோதனை அடிப்படையில் விஸ்மயா கணவர் கிரண் குமார் தான் குற்றவாளி என்றும் வரதட்சணை கொடுமை, உடல் அல்லது மனநலப் பாதிப்பை ஏற்படுத்துதல், தற்கொலைக்குத் தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் கிரண் குமார் தண்டனை என தீர்ப்பளிக்கபடுவதாக நீதிபதி தெரிவித்தார். மேலும், தண்டனை விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் நீதிபதி தெரிவித்தார்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com