குழந்தைகள் கேம்களுக்கு அடிமையாவதை தடுக்க அடிக்ஷன் சென்டர்!

குழந்தைகள் கேம்களுக்கு அடிமையாவதை தடுக்க அடிக்ஷன் சென்டர்!

ஆன்லைன் கேம்களில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் பலரும் அடிமையாகிக் கிடக்கின்றனர். குழந்தைகள் ஆன்லைன் கேம்களுக்கு அடிமையாவது என்பது பிற்காலத்தில் அவர்களுக்கு பெரும் விளைவை ஏற்படுத்தும். இதையடுத்து அதுபோன்ற குழந்தைகளுக்கு உளவியல் ரீதியாக உதவு டி-டாட் என்ற டிஜிடட்ல் டி-அடிக்ஷன் மையம் அமைக்க கேரள காவல்துறை முடிவெடுத்துள்ளது. இந்த திட்டமானது அடுத்த இரண்டு மாதங்களில் முழுமையாக நடைமுறைக்கு வரும் என கூறப்படுகிறது.

டி-டாட் ஆனது உளவியலாளர்கள், ஆலோசகர்கள் மற்றும் குழந்தைகளுக்கான நட்பு கருவிகள் மூலம் நிர்வகிக்கப்படும். இந்த டிஜிட்டில் டி-அடிக்ஷன் மையமானது முதற்கட்டமாக திருவனந்தபுரம், கொச்சி, கோழிக்கோடு மற்றும் திருச்சூர் பகுதிளில் தொடங்கப்படும் என கூறப்படுகிறது. ஊடாடும் கல்வி, விஞ்ஞான ரீதியாக திருப்பல் உக்திகள் உள்ளிட்டவைகள் செயல்படுத்தப்படும். இந்த மையங்களில் இருப்பவர்கள் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் மூலமாக ஆலோசனை வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

மேலும் பல்வேறு மாவட்டங்களில் உள்ளவர்கள் கூடுதல் ஆலோசனை தேவைப்படும் பட்சத்தில் ஆஃப்லைன் ஆலோசனைகள் வழங்கப்படும். திறமையான தனித்தனி விசாரணைக்கு பின் விரிவான ஆராய்ச்சி மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மையம் நாட்டிலேயே முதன்முறையாக செயல்படுத்தப்படுவதாக கூறப்பட்டுள்ளது. மேலும் முதற்கட்டமாக செயல்படுத்தப்படும் திருவனந்தபுரம், கொச்சி, கோழிக்கோடு மற்றும் திருச்சூர் ஆகிய நான்கு இடங்களில் மையங்கள் அமைக்க மாநில அரசு சார்பில் ரூ.1.30 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்டெர்நெட் அண்ட் மொபைல் அசோசியேஷன் ஆஃப் இந்தியாவின் தகவல்படி, 46% இந்தியர்கள் இணையத்தை தீவிரமாகப் பயன்படுத்துகின்றனர் எனவும் மகாராஷ்டிரா 61% உடன் முதலிடத்தில் உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டது. இதில் கேரளா 59 சதவீதத்தைக் கொண்டிருக்கிறது. ஆன்லைனில் அதிக நேரம் செலவழிக்கும் குழந்தைகள் ஆன்லைன் பாலியல் துஷ்பிரயோகம், ஆபாசப் படங்கள் மற்றும் பல தனியுரிமை தொடர்பான சிக்கல்களுக்கு ஆளாக நேரிடும் எனவும் இதை சரிபார்க்காவிட்டால் எந்த நேரத்திலும் அவர்கள் அடிமைகளாக மாறக்கூடும். அதேபோல் தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் தகவல்படி, 2020-21 இல் நாடு முழுவதும் சைபர் குற்றங்கள் 12 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com