மத்தியஅரசின் கல்வி நிறுவனம் -ஐஐடி மீது நடவடிக்கை

மத்திய அரசின் கல்வி நிறுவனம் என்பதால் ஐஐடி மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பது காவல் துறையினரின் அலட்சியமா? அல்லது பயமா? என அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.
மத்தியஅரசின் கல்வி நிறுவனம் -ஐஐடி மீது நடவடிக்கை

சென்னை ஐஐடி மாணவி தொடர்ந்து பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் குறித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் பொதுச்செயலாளர் சுகந்தி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர் ,

சென்னை ஐஐடியில் வேதியியல் துறை ஆராய்ச்சி பட்ட படிக்கும் மேற்கு வங்கத்தை சேர்ந்த பெண் ஒருவர்  2017 முதல் உடன்  படிக்கும் மாணவர்கள் கிங் ஆமா சந்தீப் ஷர்மா சுபதீப் பானர்ஜி மலாய் கிருஷ்ண மகதோ என்ற மாணவர்கள் மாணவியை ஆபாசமாக படம் எடுத்து வைத்து தொடர்ந்து 2 ஆண்டுகளாக பாலியல் சீண்டலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.

மேலும் இந்த பிரச்சனை குறித்து பேராசிரியர் எடமன பிரசாத்திடம் புகார் அளிக்கும் போது மாணவியை சாதிரீதியான வன்கொடுமைக்கும் குற்றவாளிகளை பாதுகாக்கும் நோக்குடன் பிரச்சனையை அணுகி உள்ளார். அதேபோல் சம்பவம் குறித்து 2021 மார்ச் மாதம் தேசிய மகளிர் ஆணையத் இருக்கும் தமிழக காவல்துறை அதிகாரிகளுக்கும் புகார் மனு அனுப்பியும் மேலும் எந்த ஒரு நடவடிக்கையையும் தற்போது வரை நடவடிக்கை எடுக்காமலும் தொடர்ந்து மாணவியை இழுத்தடிக்கப்பட்டு வந்ததாகவும் தெரிவித்தார். எனவே இந்த விவகாரம் தொடர்பாக உடனடியாக ஒரு மாதத்திற்குள் ஐஐடி உள் புகார் கமிட்டி முழு அறிக்கையை சமர்ப்பித்து குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

மேலும் மயிலாப்பூர் மகளிர் காவல் நிலையத்திற்கு கீழ்வரும் இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என்றும், உடனடியாக இந்த வழக்கை விசாரித்து சுதந்திரமாக சுற்றித்திரியும் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும் என்றும் மத்திய அரசின் கல்வி நிறுவனம் என்பதால் ஐஐடி மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பது காவல் துறையினரின் அலட்சியமா? அல்லது பயமா? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com