யுவராஜ் உள்ளிட்ட 10 குற்றவாளிகளுக்கு சாகும் வரை சிறை

பொறியியல் கல்லூரி மாணவர் கோகுல்ராஜ் கொலை வழக்கில் முதல் குற்றவாளியான யுவராஜ் உள்ளிட்ட 10 குற்றவாளிகளுக்கும் சாகும்வரை ஆயுள் தண்டனை விதித்து மதுரை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
யுவராஜ் உள்ளிட்ட 10 குற்றவாளிகளுக்கு சாகும் வரை சிறை

சேலம் மாவட்டம் ஓமலூரைச் சோ்ந்த கல்லூரி மாணவா் கோகுல்ராஜ் கடந்த 2015-ஆம் ஆண்டு, நாமக்கல் தொட்டிபாளையம் ரயில் தண்டவாளத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தாா். காதல் விவகாரத்தில் கோகுல்ராஜ் தலை துண்டிக்கப்பட்டு ஆணவக்கொலை செய்யப்பட்டது காவல்துறை நடத்திய விசாரணையில் அம்பலமானது.

இந்த வழக்கில் சங்ககிரியைச் சோ்ந்த தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ், உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் இறுதியாக 5 பேர் விடுதலை செய்யப்பட்ட நிலையில், 10 பேர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், கொலை, வன்கொடுமை, கொலை, கூட்டுச்சதி, ஆட்கடத்தல் கொலை, தஞ்சமடைய உதவுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் குற்றவாளிகள் 10 பேருக்கும் சாகும்வரை ஆயுள் சிறைத்தண்டனை விதித்து நீதிபதி சம்பத்குமார் உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com