10 நாளில் 19 படுகொலை - கொலைக் களமாகும் தென்மாவட்டங்கள்

தென்மாவட்டங்களில் கடந்த 10 நாட்களில் மட்டும் 19 படுகொலைகள். கூலிப்படையினர் அட்டூழியம் தலைதூக்கி வருகிறதா என பொதுமக்கள் அச்சம்
10 நாளில் 19 படுகொலை - கொலைக் களமாகும் தென்மாவட்டங்கள்

தென்தமிழ்நாட்டில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மிகப்பெரிய அளவில் படுகொலைகள் அரங்கேற்றப்படுவது...

சாதி மோதல்களால் உயிர்கள் பறிக்கப்படுவதும், இதை வீரமென்று பெருமையடித்துக் கொள்வதும் தொடர்கதையாக இருந்தது.

வேலைவாய்ப்பை அதிகப்படுத்தி, பொருளாதாரத்தை மேம்படுத்த முடிவு செய்த கலைஞர், நீதியரசர் ரத்தினவேல் பாண்டியன் தலைமையில் குழு அமைத்து உத்திரவிட்டார்.

ரமேஷ் வழக்கறிஞர் - நெல்லை

தென்மாவட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லாமல் இருப்பதுதான் படுகொலைகள் மற்றும் சாதி மோதல்கள் ஏற்படக் காரணம் என அறிக்கை அளிக்கப்பட்டது

அறிக்கை அடிப்படையில், நெல்லை மாவட்டம் நாங்குநேரி மற்றும் கங்கைகொண்டான் பகுதிகளில் தொழிற்நுட்ப பூங்கா அமைக்கப்பட்டது

ஆனால், அடுத்தடுத்து 10 ஆண்டுகளுக்கு அதிமுகவின் பிடியில் தமிழ்நாடு சிக்குண்டதால், இன்றுவரை போதுமான அளவுக்கு நிறுவனங்கள் தொடங்கப்படவில்லை

தென்மாவட்ட இளைஞர்கள் வேலைவாய்ப்பு கிடைக்காமல் வெளி மாவட்டங்களுக்கு வேலை தேடிச் செல்வதும் வன்முறைகளில் ஈடுபாடு காட்டுவதும் தொடர்கதையாக உள்ளது

ரூபி மனோகரன் -நாங்குனேரி காங் எம்.எல்.ஏ

கடந்த பத்து நாட்களில் மட்டும் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் படுகொலை நிகழ்வுகள் அதிகரித்து வருகின்றன

10 நாட்களில் நெல்லை மாவட்டத்தில் 6 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர் 12 பேர் அரிவாளால் வெட்டப்பட்டு பலத்த காயங்களுடன் மருத்துவம் பெற்று வருகின்றனர்

ரமேஷ் வழக்கறிஞர் - நெல்லை

ஆயக்குடியில் இரண்டு பேர், தேவிபட்டணத்தில் ஒருவர், சங்கரன்கோவில் பகுதியில் 3 பேர் என தென்காசி மாவட்டத்தில் 6 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்

தூத்துக்குடி மாவட்டத்தில், மணியாச்சி, முறப்பநாடு, வல்லநாடு, சாத்தான்குளம் ஆகிய பகுதிகளில் மொத்தம் ஐந்து பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்

11 பேர் படுகாயங்களுடன் அரசு மருத்துவமனையில் மருத்துவம் பெற்று வருகின்றனர் கன்னியாகுமரி மாவட்டத்தில் 2 படுகொலைகள் அரங்கேறியுள்ளன

பாஸ்கர் - மாக்சிஸ்ட் கம்னியூஸ்ட்

படுகொலைகள் அனைத்தும் ஒரே சாதியைச் சேர்ந்தவர்களுக்கு இடையிலும், கள்ளத்தொடர்பு காரணமாக இருவேறு சாதியைச் சேர்ந்தவர்கள் இடையிலும் நடைபெற்றுள்ளன

ரூபி மனோகரன் -நாங்குனேரி காங் எம்.எல்.ஏ

கலைஞர் அறிவித்த நாங்குநேரி மற்றும் கங்கைகொண்டான் தொழிற்நுட்பப் பூங்காக்களை தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவாக புதுப்பித்து... புதிய புதிய நிறுவனங்கள் தொடங்கப்பட வேண்டும் தென்மாவட்ட இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com