தென்னிந்தியாவின் டாப் ஹீரோ யார் தெரியுமா?

தென்னிந்தியாவின் டாப் ஹீரோ யார் தெரியுமா?

தென்னிந்திய ஹீரோக்களை இன்ஸ்டாகிராமில் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் முதல் ஐந்து இடத்தில் இருப்பவர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். அதில் அல்லு அர்ஜுன் முதல் இடத்தில் உள்ளார். இவர் புட்டபொம்மா மற்றும் ஸ்ரீவள்ளி பாடல்களின் மூலம் உலக அளவில் பிரபலமடைந்தார். இன்ஸ்டாகிராமில் அவரை 17.5 மில்லியன் பேர் பின் தொடர்கின்றனர்.

இதில் இரண்டாவது இடத்தில் விஜய் தேவரகொண்டா உள்ளார். இவர் அர்ஜுன் ரெட்டி மற்றும் கீதா கோவிந்த படத்தின் மூலம் பிரபலமடைந்தார். இவரை இன்ஸ்டாகிராமில் 14.7 மில்லியன் பேர் பின் தொடர்கின்றனர்.

இதில் மூன்றாம் இடத்தில் இருப்பவர் கேரளாவை சேர்ந்த துல்கர் சல்மான். இவர் ஓகே கண்மணி மற்றும் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் மூலம் தமிழில் அதிக ரசிகர்களை பெற்றுள்ளார். இவரை இன்ஸ்டாகிராமில் 10.1 மில்லியன் பேர் பின் தொடர்கின்றனர்.

நான்காம் இடத்தில் இருப்பவர் பிரபாஸ். இவர் பாகுபலி படத்தில் மூலம் இந்தியாவில் முக்கிய ஹீரோக்களில் ஒருவராக வளர்ந்தார். இவரை இன்ஸ்டாகிராமில் 8.1 மில்லியன் ரசிகர்கள் பின் தொடர்கின்றனர்.

இந்த வரிசையில் ஐந்தாம் இடத்தில் இருப்பவர் மகேஷ் பாபு. இவர் ஸ்பைடர் படத்தின் மூல்ம் தமிழில் அறிமுகமானார். இன்ஸ்டாகிராமில் இவரை 8 மில்லியன் ரசிகர்கள் இவரை பின் தொடர்கின்றனர்.

தமிழ் நடிகர்களில் சிம்பு மட்டுமே இன்ஸ்டாகிராமில் அதிக பின் தொடர்பவர்களை கொண்டுள்ளார். அவரை 6.6 மில்லியன் ரசிகர்கள் பின் தொடர்கின்றனர்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com