விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி மூலம் பிரபலமானவர் அஸ்வின். அதே டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் மூலம் பிரபலமானவர் லாஸ்லியா. லாஸ்லியா பல படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் லாஸ்லியா மற்றும் தர்ஷன் நடித்துள்ள கூகுள் குட்டப்பன் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
அஸ்வினும் பல படங்களில் நடித்து வருகிறார். இவருடைய ஆல்பம் பாடல்கள் எப்போதும் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கும். பெரும்பாலும் குழந்தைகளுக்கு இவருடைய ஆல்பம் பாடல் மிகவும் பிடிக்கும்.
தற்போது லாஸ்லியா மற்றும் அஸ்வின் இருவரும் சேர்ந்து சுகர் பேபி என்ற ஆல்பம் பாடலில் நடித்துள்ளனர். இப்பாடலின் போஸ்டர் காதலர் தினத்தன்று வெளியானது. இப்பாடலுக்கு சாண்டி மாஸ்டர் கோரியோகிராபி செய்துள்ளார். இப்பாடலின் ப்ரோமோ நேற்று வெளியானது. சுகர் பேபி பாடல் மார்ச் 30ஆம் தேதி வெளியாக உள்ளது. இதனால் அஸ்வின் மற்றும் லாஸ்லியா இருவரும் ஊடகங்களில் பேட்டி கொடுத்துள்ளார்.
இந்த ஆல்பம் பாடலில் மலையாளத்தில் சேர்ந்த ஒரு பெண் குழந்தை நடித்துள்ளார். இந்நிகழ்ச்சியில் அந்த குழந்தையும் பங்கு பெற்றார். இந்தப் பேட்டியின் போது அஸ்வின் மற்றும் அந்தக் குழந்தையின் பிணைப்பு அப்பா, மகள் போல இருந்தது. பின் தனது மடியில் அந்த குழந்தையை வைத்துக்கொண்டு அஸ்வின் கொஞ்சும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
சமீபத்தில் அஸ்வின் பல சர்ச்சைகளில் சிக்கினாலும், அவருடைய நற்பண்பை பார்த்து பலரும் பாராட்டி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் தற்போது அஸ்வின் என்ற ஹேஸ்டேக் இணையத்தில் ட்ரெண்டாகி ஆகியுள்ளது.