ஏகே61 எப்படி இருக்கும்? விக்னேஷ் சிவன் சொல்றத கேளுங்க !!

வலிமை படத்தின் வெற்றிக்குப் பின்னர் மீண்டும் இந்த கூட்டணி ஏகே61 படத்தின் மூலம் இணைந்துள்ளது. அஜித்தை வைத்து வினோத் இயக்கும் இந்த ஏகே61 படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடங்கியுள்ளது.
விக்னேஷ் சிவன்
விக்னேஷ் சிவன்

வங்கிக் கொள்ளையை அடிப்படையாக வைத்து இப்படம் உருவாக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மங்காத்தா படத்திற்கு பிறகு மீண்டும் ஒரு கொள்ளை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகும் இந்த ஏகே61 படத்தில் அஜித் நடிக்கிறார்.

ஏற்கனவே வெளியான அறிவிப்பின்படி விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் 'ஏகே62' படத்தின் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது. இப்படம் குறித்து இயக்குனர் விக்னேஷ் சிவன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறுகையில், இதுவரை அஜித் நடித்திராத அளவில் முற்றிலும் மாறுபட்ட கதையம்சத்துடன் இப்படம் உருவாகும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் 'ஏகே62' படத்தின் கதை என்னவாக இருக்கும் என்பது தெளிவாக தெரியவில்லை. படத்தின் படப்பிடிப்பு, படத்தில் நடிக்கப்போகும் முக்கிய கதாபாத்திரங்கள் குறித்த அறிவிப்பை படக்குழு விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com