மீண்டும் பூரி ஜெகன்நாத்துடன் இணையும் விஜய் தேவரகொண்டா !!

மீண்டும் பூரி ஜெகன்நாத்துடன் இணையும் விஜய் தேவரகொண்டா !!

விஜய் தேவரகொண்டா தற்போது இந்திய அளவில் முன்னணி நடிகராக உருவெடுத்துள்ளார். அவரது படங்களுக்கு இந்திய அளவில் பெரிய மார்க்கெட் உருவாகியுள்ளது. விஜய் தேவரகொண்டா தற்போது இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் 'லைகர்' படத்தில் நடித்து முடித்துள்ளார்.

பிரபல குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்திற்கு ரசிகர்கள் பெரும் எதிர்ப்பார்ப்போடு காத்திருக்கின்றனர். இப்படம் ஆகஸ்ட் 25-ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியிடப்பட உள்ளது.

தற்போது விஜய் தேவரகொண்டா மீண்டும் இயக்குனர் பூரி ஜெகன்நாத் உடன் புதிய படத்திற்காக கூட்டணி அமைத்துள்ளார். இந்தப் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. நாளை இந்தப் புதிய படம் துவங்க இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போஸ்டரில் போர் விமானம் இடம் பெற்றுள்ளது. எனவே இந்தப் படத்தில் விஜய் தேவரகொண்டா விமானியாக நடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தில் நடிகை ஜான்வி கபூர் கதாநாயகியாக நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com