வெளியானது விக்னேஷ் சிவன் - நயன்தாரா திருமண தேதி !!

இயக்குனர் விக்னேஷ் சிவனும், நடிகை நயன்தாராவும் காதலித்து வரும் நிலையில், இவர்கள் திருமணம் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
வெளியானது விக்னேஷ் சிவன் - நயன்தாரா திருமண தேதி !!

நயன்தாரா - விக்னேஷ் சிவன்

நடிகர், பாடலாசிரியர், இயக்குனர் என பன்முகத்திறமை கொண்டவர் விக்னேஷ் சிவன். இவர் சிம்புவின் ‘போடா போடி’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.

இதையடுத்து 2015-ம் ஆண்டு அவர் இயக்கிய ‘நானும் ரவுடி தான்’ படத்தின் போது, நயன்தாராவுக்கும், அவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இவர்களது காதல் 6 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. நயன் தாராவும் விக்னேஷ் சிவனும் விரைவில் இவர்கள் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக செய்திகள் வெளியானது.

இந்நிலையில், இவர்கள் திருமணம் ஜூன் 9 ஆம் தேதி நடைபெற இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இவர்கள் திருமணம் திருப்பதி கோவிலில் நடைபெற இருக்கிறது. விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் இன்று திருமண மண்டபத்தை முன்பதிவு செய்துள்ளார்கள்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com