விக்னேஷ் சிவனை ஏங்க வைத்த நயன்தாரா?

விக்னேஷ் சிவனை ஏங்க வைத்த நயன்தாரா?

தமிழ்திரையுலகில் காதல் ஜோடிகளாக வலம் வரும் ஜோடி நயன்தாரா- விக்னேஷ் சிவன். சில வருடங்களாக இவர்கள் காதலித்து வருகின்றனர். சமீபத்தில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்துவாக்குல 2 காதல் படத்தில் நயன்தாரா நடித்துள்ளார்.

அடுத்ததாக, விக்னேஷ் சிவன் அஜித்தின் 62வது படத்தை இயக்க உள்ளார். இப்படத்திலும் கதாநாயகி நயன்தாரா தான். தற்போது அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் பாலிவுட் படமான லயன் படத்திலும் நயன்தாரா, ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிக்கிறார். இப்படத்திற்காக ஏப்ரல் முதல் வாரம் நயன்தாரா மும்பை செல்ல இருக்கிறார். இதன் படப்பிடிப்பு ஃபிலிம் சிட்டி ஸ்டூடியோவில் நடக்க உள்ளதாக கூறப்படுகிறது. இவ்வாறு பிஸி ஷெட்யூலில் இருக்கிறார் நயன்தாரா.

விக்னேஷ் சிவன், நயன்தாரா இருவரும் ஒரு படம் முடிந்த பிறகு வெளிநாடு சுற்றுலா செல்வதை வழக்கமாக வைத்திருப்பார்கள். அங்கு எடுக்கும் புகைப்படங்களை விக்னேஷ் சிவன் தனது சோஷியல் மீடியா பக்கங்களில் வெளியிடுவார்.

தற்போது காத்துவாக்குல 2 காதல் படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் இருவரும் வெளிநாட்டுக்கு சுற்றுலா செல்ல திட்டமிட்ருந்தனர். ஆனால் திடீரென நயன்தாராவிற்கு படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் சூழ்நிலை ஏற்பட்டதால் இவர்களால் அந்த விடுமுறையை கொண்டாட முடியவில்லை என்ற வருத்தத்தில் விக்னேஷ் சிவன் உள்ளாராம்.

அதுமட்டுமல்லாமல் நயன்தாராவை பிரிந்த ஒரு வாரம் இருக்க வேண்டும் என்ற கவலையிலும் விக்னேஷ் சிவன் உள்ளாராம். ஆனால் காத்துவாக்குல 2 காதல் படத்தின் ரிலீசுக்கு முன்பே நயன்தாரா சென்னைக்கு திரும்ப உள்ளார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com