6 விருதுகளை அள்ளிய "டியூன்" !

94வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கோலாகலமாக நடைபெற்றது.
6 விருதுகளை அள்ளிய  "டியூன்" !

ஆஸ்கர் விருது விழா கடந்த 4 வருடங்களாக தொகுப்பாளர்கள் இன்றி நடத்தப்பட்டு வந்த நிலையில், இந்த ஆண்டு வாண்டா சைக்ஸ் , ஏமி ஸ்கூமர் , ரெஜினா ஹால் ஆகியோர் தொகுத்து வழங்கி வருகின்றனர். ஆஸ்கர் விருது விழாவை மூன்று பெண்கள் தொகுத்து வழங்குவது இதுவே முதன்முறை.

ஆஸ்கர் விருதுக்கான இறுதிப் பரிந்துரைப் பட்டியலுக்கு 'பெல்பாஸ்ட்', 'கோடா ', 'டோண்ட் லுக் அப்', 'டிரைவ் மை கார்', ‘டியூன்', 'கிங் ரிச்சர்டு', 'லிக்கொரைஸ் பீஸா', 'நைட்மேர் அலே', 'தி பவர் ஆப் தி டாக்', 'வெஸ்ட் சைடு ஸ்டோரி' ஆகிய 10 படங்கள் இடம் பெற்றுள்ளன.

வெஸ்ட் சைடு ஸ்டோரி திரைப்படத்தில் நடித்த அரியானா டிபோஸ் சிறந்த துணை நடிகைக்கான ஆஸ்கர் விருது வென்றார். டெனிஸ் வில்லெனு இயக்கிய டியூன் படத்துக்கு சிறந்த விஷுவல் எபெக்ட்ஸ், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு, சிறந்த பின்னணி இசை, சிறந்த படத்தொகுப்பு, சிறந்த ஒலி ஆகிய 6 பிரிவுகளில் ஆஸ்கர் விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.

டியூன் படத்துக்கு 2 ஆஸ்கர் விருதுகள் கிடைத்துள்ளன. சிறந்த இசைக்கான ஆஸ்கர் விருதை டியூன் படத்திற்காக 5 இசையமைப்பாளர்கள் பெற்றனர்.சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருதை டியூன் படத்திற்காக கிரேக் பிரேசர் பெற்று கொண்டார்.

டியூன் படத்திற்காக சிறந்த தயாரிப்பு வடிவமைப்புக்காக பேட்ரிஸ் வெர்மெட்டெ மற்றும் சுசன்னா சிபோஸ் ஆகியோருக்கும், சிறந்த படத்தொகுப்புக்காக ஜோ வாக்கருக்கும், சிறந்த பின்னணி இசைக்காக ஹேன்ஸ் ஸிம்மருக்கும், சிறந்த ஒலிப்பதிவுக்காக மேக் ருத், மார்க் மங்கினி, தியோ கிரீன், டக் ஹெம்பில் மற்றும் ரான் பேர்லெட் ஆகியோருக்கு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டுள்ளன.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com