2 நாட்களில் 2 மில்லியன் பார்வைகளை கடந்த வாடிவாசல் பாடல் !!

2 நாட்களில் 2 மில்லியன் பார்வைகளை கடந்த வாடிவாசல் பாடல் !!

லெஜண்ட் படத்தில் இடம்பெற்றுள்ள வாடிவாசல் பாடல் 2 நாட்களில் 20 லட்சம் பார்வைகளை யூடியூபில் கடந்துள்ளது. பாடலில் நடிகர் சரவணனின நடனம் மற்றும் எக்ஸ்ப்ரஷன் சிறப்பாக உள்ளதென நெட்டிசன்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸின் உரிமையாளர் சரவணனின் நடிப்பில் ஜேடி ஜெர்ரி இயக்கத்தில் லெஜண்ட் என்ற படம் உருவாகி வருகிறது. இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

லெஜண்ட் படத்தில், இந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் ஊர்வசி ரவுதலா நடித்துள்ளார். அவருடன் கீதிகா, விவேக், நாசர், பிரபு, விஜய குமார், யோகி பாபு உள்ளிட்டோர் படத்தில் இடம்பெற்றுள்ளனர். தமிழ் சினிமாவின் டாப் டெக்னிஷியன்ஸ் இந்த படத்தில் இணைந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகம் காணப்படுகிறது.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் படத்திலிருந்து வெளியான மொசலோ மொசலு என்ற பாடல் மெகாஹிட்டான நிலையில் நேற்று முன்தினம் வாடிவாசல் பாடல் வெளிவந்தது. இந்நிலையில் பாடல் 2 மில்லியன் பார்வைகளை யூடியூபில் கடந்துள்ளது. மதுரை மண்ணில் நடிகை ராய் லட்சுமியுடன் சேர்ந்து லெஜண்ட் சரவணன் போடும் குத்தாட்டம் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com