என்னை வெறுப்பவர்களுக்கு நன்றி ; ட்ரால் செய்பவர்களுக்கு பதிலடி கொடுத்த அஸ்வின்!!

அஸ்வின்
அஸ்வின்

சமீபத்தில் பல ட்ரால்களை சந்தித்த நடிகர் அஸ்வின், தனது இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோ பதிவு செய்திருக்கிறார். அதில், தன்னை வெறுப்பவர்களையும் ட்ரால் செய்பவர்களையும் குறித்து பேசுகையில், தான் அவர்களுக்கு நன்றி கூறுவதாகவும் பதிவு செய்திருக்கிறார். இது தற்போது இணையத்தில் வைரலாக பேசப்பட்டு வருகிறது.

பல குறும்படங்களில் நடித்திருந்தாலும் நடிகர் அஸ்வின் பலராலும் அறியப்பட்டது குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி மூலமாகத் தான். தனியார் தொலைக்காட்சியின் முன்னணி நிகழ்ச்சியான குக் நித் கோமாளியில், தனது அழகான பேச்சு மற்றும், அசத்தலான குக்கிங்கோடு, பல பெண் ரசிகைகளைக் குவித்தார் அஸ்வின். பின், அவர் நடித்த குறும்படங்களும் அதிக பார்வையாளர்களப் பெற்றது.

இவரது நடிப்பில் ரசிகைகளான பலரும், அஸ்வினின் திறமை வெள்ளித் திரையை அடைய வேண்டும் என விரும்பினர். அஸ்வினின் குறிக்கோளும் அதுவாக இருக்க, குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் தனக்குக் கிடைத்த பிரபலத்தை பயன்படுத்தி ஒரு படத்தில் நடித்தார். என்ன சொல்ல போகிறாய் என்ற தலைப்பில் உருவான அவரது படத்திற்கு அனைவரும் மிக ஆர்வமாக காத்திருந்தனர்.

படத்தின் ப்ரொமொஷன்களில் அஸ்வின் பேசிய பேச்சுகள் கலவையான விமர்சனத்தையே பெற்றது. பலரும் ரசித்த அஸ்வின் சிறிது தலைக்கணம் கொண்டது போல பேசியதாக ஒரு சில நெட்டிசன்கள் கூறிய நிலையில், அந்த வீடியோவை இன்று வரை அனைவரும் கேலி செய்து வருகின்றனர். படத்தின் இசை வெளியிட்டு விழாவில் பேசிய அவர், கதை பிடிக்கவில்லை என்றால் நான் தூங்கிவிடுவேன்.

இதுவரை நான் கேட்ட 40 கதைகளில் நான் தூங்கி விட்டேன். ஆனால், நான் கேட்ட கதைகளில் தூங்காத ஒரு கதை தான் என்ன சொல்ல போகிறாய். அந்த கதை பிடித்துப்போய் நான் நடிக்க ஓகே சொல்லிவிட்டேன் என்று பேசி இருந்தார். அந்த நிலையில், படம் எப்படி இருக்குமோ என்ற பயமும் ரசிகர்களுக்கு வர தொடங்கியது. பின், அஸ்வின், கிளம்பிய குழப்பங்களுக்கு விளக்கமும் கொடுத்து மன்னிப்பு கேட்டது குறிப்பிடத்தக்கது.

தேஜு அஸ்வினி, அவந்திகா மிஸ்ரா, குக் வித் கோமாளி புகழ் என்று பலர் நடித்த இந்த படம் வெளியாகிய பின், எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை என்றாலும், சுமாரான வரவேற்பையே பெற்றது. அதற்கு படத்தின் கதை காரணம் இல்லை என்றும், அஸ்வினின் பேச்சு தான் காரணம் என்றும் பலரும் கூறி வந்தனர். இதைத் தொடர்ந்து அஸ்வின் அடுத்து என்ன பேசப்போகிறார் என காத்திருந்த ரசிகர்கள், அவர் எது பேசினாலும் அது ட்ரால் கண்டெண்ட் ஆகி இணையம் முழுவதும் பரவி வந்தது.

இந்நிலையில், அஸ்வின், தனது பிறந்தநாளை ஒட்டி தனது இன்ஸ்டாகிராமில் ஒரு லைவ் போட்டிருந்தார். அதில், தனக்கு அன்பை வாரி இறைக்கும் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்ததோடு, தன்னை ட்ரால் செய்பவர்களையும், வெறுப்பவர்களையும் குறித்து பேசியது வைரலானது. தனது ரசிகர்களிடம், “உங்கள் அன்பிற்கு நான் தகுதியானவனா?” என கேள்வி கேட்டு நன்றி கூறிய பின், தன்னை ட்ரால் செய்பவர்களுக்கு நன்றி கூறினார்.

அப்போது பேசிய அவர், “என்னை பிடித்தவர்களுக்கு நன்றி. என்னை பிடிக்காதவர்கள் இருந்தால் அவர்களிடம் ஒன்றை சொல்கிறேன். உங்களுக்கு என்னை பிடிக்க அளவுக்கு உழைத்து படங்கள் செய்வேன் என்று கூறி இருந்தார்.” இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் அஸ்வின் பேசியது சரிதான் என்றும், அஸ்வினை ட்ரால் செய்பவர்களுக்கு எதிராகவும் பதிவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com