தமிழ் சினிமாவில் 90களில் இருந்த முன்னணி நடிகர்களுடன் இணைந்து படங்கள் நடித்து மக்கள் மனதில் பெரிய இடம் பிடித்தவர் நடிகை தேவயானி.
மும்பையை சேர்ந்த இவரது இயற்பெயர் சுஷ்மா, சினிமாவிற்கு வந்த பிறகு பெயர் மாறியது. தமிழை தாண்டி தெலுங்கு, பெங்காலி, மலையாளம் போன்ற மொழிகளில் படங்கள் நடித்துள்ளார்.
தேவயானி வீட்டில் சம்மதம் இல்லாமல் இயக்குனர் ராஜகுமாரனை எப்படி திருமணம் செய்துகொண்டார் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். 2001ம் ஆண்டு திருத்தணியில் இவர்களது திருமணம் நடக்க நடிகையின் வீட்டில் பெரிய எதிர்ப்பு இருந்தது.
ராஜகுமாரன் மீது அவர்கள் போலீஸில் புகார் எல்லாம் அளித்தார்கள். இவர்களுக்கு இப்போது இரண்டு பெண் குழந்தைகள் உள்ளார்கள்.
தேவயானி திருமணத்தில் இருந்து அவரிடம் குடும்பத்தார் யாரும் பேசுவது இல்லையாம். இப்போது தேவயானியிடம் அம்மா-அப்பா என எல்லோரும் பேசிவிட்டாலும் நடிகர் நகுல் பேசுவதே இல்லை.
தன்னை நகுல் ஒரு தேச விரோதியாக பார்ப்பதாக ராஜகுமாரன் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். தேவயானிக்கு குடும்பத்தில் யாரும் பேசுவதி இல்லையாம், தமிழ்நாட்டு மக்களும், கலை உலகம் தான் உறவுகள் என கூறியிருக்கிறார்.