செல்வராகவன் - கீர்த்தி சுரேஷ் நடிக்கும் சாணிக் காயிதம் டீசர் வெளியீடு !!

சாணிக் காயிதம்
சாணிக் காயிதம்

ராக்கி படத்தை இயக்கி தனக்கென்று தனி இடத்தை தமிழ் சினிமாவில் பிடித்திருப்பவர் இயக்குனர் அருண் மாதேஸ்வரன்.

அவரது இயக்கத்தில் அடுத்ததாக தயாராகியுள்ள படம் 'சாணிக் காயிதம்'. இந்த திரைப்படத்தில் முதன்முறையாக முன்னணி இயக்குனர்களில் ஒருவரான செல்வராகவன் மற்றும் நடிகை கீர்த்தி சுரேஷ் இருவரும் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

சாணிக் காயிதம் திரைப்படம் ராமேஸ்வரத்தில் படமாக்கப்பட்டுள்ளது. 80-களின் காலக்கட்டத்தின் பிண்ணனியில் நடக்கும் கிரைம் திரில்லராக இந்த படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. ஸ்கிரீன் சீன் என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ளது. சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார். யாமினி யக்ஞமூர்த்தி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இப்படம் ஓடிடியில் மார்ச் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு ஏப்ரல் 7ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அப்போதும் வெளியாகவில்லை. இந்த நிலையில் இந்த திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது. வருகிற மே மாதம் 6-ந்தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com