ஷூட்டிங்கில் ஸ்பாட்டில் விபத்தில் சிக்கிய சமந்தா, விஜய் தேவரகொண்டா !!

ஷூட்டிங்கில் ஸ்பாட்டில் விபத்தில் சிக்கிய சமந்தா, விஜய் தேவரகொண்டா !!
Classic

விஜய் தேவரகொண்டா, சமந்தா நடித்து வரும் குஷி படத்தின் ஷூட்டிங் காஷ்மீரில் நடந்தது. ஆக்ஷன் காட்சி ஒன்றை படமாக்கியிருக்கிறார்கள். அப்பொழுது விஜய் தேவரகொண்டா, சமந்தா சென்ற கார் ஆற்றில் விழுந்துவிட்டது. இதில் சமந்தா, விஜய் தேவரகொண்டா காயம் அடைந்தார்கள். இது குறித்து படக்குழுவை சேர்ந்த ஒருவர் கூறியதாவது,

காயம் அடைந்ததும் இருவருக்கும் முதலுதவி கொடுக்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை படப்பிடிப்பின்போது இருவருமே முதுகு பகுதி வலிப்பதாக தெரிவித்தனர். உடனே அருகில் உள்ள ஹோட்டலில் அவர்களை தங்க வைத்து பிசியோதெரபிஸ்ட்டை வரவழைத்தோம்.

இருவருக்கும் பிசியோதெரபி போய்க் கொண்டிருக்கிறது. அவர்கள் இருவருக்கும் அருகில் செல்ல யாருக்கும் அனுமதி இல்லை என்றார்.

காஷ்மீரில் படப்பிடிப்பை முடித்துக் கொண்டு திங்கட்கிழமை மதியம் படக்குழு ஹைதராபாத் கிளம்பி வந்தது. குஷி படம் வரும் டிசம்பர் மாதம் தியேட்டர்களில் ரிலீஸாகவிருக்கிறது.

அந்த படம் தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் ரிலீஸாகவிருக்கிறது. நடிகையர் திலகம் படத்தை அடுத்து சமந்தா, விஜய் தேவரகொண்டா மீண்டும் சேர்ந்து நடிக்கும் படம் குஷி என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com