யார் இந்த எஸ்.ஏ.சி என யூடியூப் சேனலை தொடங்கி தனது சொந்த வாழ்க்கை வரலாற்றை தானே சொல்லி வருகிறார் இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர். பிளாட்ஃபார்மில் எஸ்.ஏ.சி என முதல் வீடியோவை போட்டு வெற்றி போதை கண்ணை மயக்கும் காதை செவிடாக்கும் என அறிவுறுத்தியிருந்தார்.
இந்நிலையில், இரண்டாவது வீடியோவின் டைட்டிலே கவனத்தை ஈர்க்கும் அளவுக்கு எஸ்.ஏ.சி. விஜய்யின் அப்பாவா? எனப் போட்டு வெளியிட்டு இருக்கும் இந்த வீடியோவில் அப்படி என்னதான் எஸ்.ஏ. சந்திரசேகர் சொல்லியிருக்கிறார் என இங்கே பார்ப்போம்.
எதற்கும் துணிந்தவன் 2வது நாள் வசூல் எவ்வளவு? மகனுடன் பிரச்சனை நடிகர் விஜய்க்கும் அவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகருக்கும் கருத்து ரீதியான பிரச்சனை நிலவி வருகிறது. சினிமா மேடைகளிலும், பேட்டிகளிலும் நடிகர் விஜய் பற்றி எஸ்.ஏ. சந்திரசேகர் பேசியது ஏகப்பட்ட சர்ச்சைகளை கிளப்பியது. சமீபத்தில், கங்கை அமரன் கூட ஒரு விழா மேடையில் எஸ்.ஏ.சிக்காக விஜய்க்கு அட்வைஸ் சொல்லி இருந்தார்.
இந்நிலையில், எஸ்.ஏ. சந்திரசேகர்என்பவர்யார்? எப்படி இந்த அளவுக்கு உயர்ந்தார் என்பதை பதிவு செய்யவும் மறைமுகமாக தனதுமகனுக்கு சிலபல கருத்துக்களை உணர்த்தவும் இந்த யூடியூப் சேனலை எஸ்.ஏ. சந்திரசேகர் தொடங்கி உள்ளார் என அவர் வெளியிட்டுள்ள முதல் வீடியோவை பார்த்தே ரசிகர்கள் விமர்சித்து இருந்தனர்.
பிளாட்ஃபாரத்தில் தினமும் இரவு படுத்துக் கொண்டு தன்னைப் பற்றிய கதைகளை சொல்லி வீடியோவாக வெளியிட்டு வருகிறார் எஸ்.ஏ. சந்திரசேகர். வீட்டில் இருந்தால் உடனடியாக தூக்கம் வரவில்லை என்றும், இங்கே வந்து படுத்தால் அடுத்த நொடியே குறட்டை விட்டு நிம்மதியாக உறங்கி விடுகிறேன் என்றும் இந்த வீடியோவில் எஸ்.ஏ. சந்திரசேகர் கூறியுள்ளார்.
எஸ்.ஏ.சி. விஜய்யின் அப்பாவா? டைட்டிலே வில்லங்கமாக வைத்து இந்த இரண்டாவது வீடியோவை எஸ்.ஏ. சந்திரசேகர் வெளியிட்டுள்ளார். நடிகர் விஜய்யை அறிமுகப்படுத்தும் போது எல்லோரும் எஸ்.ஏ. சந்திரசேகரின் மகன் விஜய் என சொல்லி வந்த நிலையில், இப்போது விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சி என சொல்லும் அளவுக்கு விஜய் முன்னேறியுள்ளார் என மறைமுகமாகவே தனது குமுறல்களை இந்த வீடியோவிலும் எஸ்.ஏ.சந்திரசேகர் பதிவு செய்துள்ளார்.
நடிகர் விஜய்யை எப்படி தான் அறிமுகப்படுத்தினேன் என்றும், அவருக்காக பல படங்களை இயக்கியது பற்றியும் கூறிய எஸ்.ஏ. சந்திரசேகர், தனக்கு பிறந்த பெண் குழந்தை வித்யா பற்றியும் பேசியது இந்த வீடியோவை பார்க்கும் ரசிகர்களை நிச்சயம் கண் கலங்க வைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. விஜய்யின் தங்கை வித்யா உயிரிழந்த நிலையில், அவர்கள் குடும்பம் சந்தித்த துயரங்கள் பற்றி எல்லாம் அடுத்தடுத்த வீடியோக்களில் பேசப் போவதாகவும் கூறியுள்ளார் எஸ்.ஏ. சந்திரசேகர்.