தெலுங்கு மாநிலங்கள் மட்டுமின்றி இந்தியா முழுவதும் உலகின் பல நாடுகளிலும் இப்போது ஆர் ஆர் ஆர் படத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். நாளை மறுநாள் இத்திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இந்த படத்திற்காக ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் ரசிகர்கள் பல மாதங்களாக காத்திருக்கின்றனர். தற்போது படம் ரிலீசுக்கு தயாராகிய நிலையில் தங்களுக்குப் பிடித்த ஹீரோக்களுக்கு புதுமையான முறையில் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் சேர்ந்த இளைஞர் ஆர் ஆர் ஆர் படத்துக்கு ஆல் தி பெஸ்ட் என புது விதத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சித்தூர் மாவட்டம் குடுபள்ளி மண்டலம் சின்ன பார்த்திகொண்டாவைச் சேர்ந்த புருஷோத்தம் என்ற இளைஞர் எப்போதும் புதுமையாக சிந்திப்பதை வழக்கமாகக் கொண்டவர். சிறுவயதில் இருந்தே பல அற்புதமான ஓவியங்களை வரைந்து வருகிறார்.
இன்னிலையில் ஆர் ஆர் ஆர் திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ள நிலையில் இந்த படத்தில் நடித்த இரண்டு ஸ்டார் ஹீரோக்களின் படங்களை டீ கப்பில் வரைய நினைத்தார். இருவரையும் தனித்தனியாக பிரித்து இல்லாமல் ஒரே படத்தில் இருவரின் படத்தை உருவாக்கினார்.
டீ கப்புகளை ஒரு பக்கத்திலிருந்து பார்க்கும் பொழுது ராம் சரண் ஓவியம் தெரியும் வகையிலும் மற்றொரு பக்கத்தில் இருந்து பார்க்கும் பொழுது ஜூனியர் என்டிஆர் ஓவியம் தெரியும் வகையிலும் வடிவமைத்தார். இதற்காக புருஷோத்தமன் 6 நாட்கள் கடினமாக உழைத்து 15 ஆயிரம் டீ கப்களை ஒன்றாக இணைந்து ரம்ஜான் மற்றும் ஜூனியர் என்டிஆர் ஓவியம் வரைந்தது குறிப்பிடத்தக்கது.