'தலைமைச் செயலக'த்தில் வசந்தபாலனுடன் இணையும் ராதிகா !!

'தலைமைச் செயலக'த்தில்  வசந்தபாலனுடன் இணையும் ராதிகா  !!

வசந்தபாலன் என்றதும் அவரது வெயில், அங்காடித்தெரு படங்கள் நினைவுவரும். இந்த இரு படங்கள் தவிர்த்து அவர் இயக்கிய படங்கள் எதுவும் வெற்றிபெறவில்லை. தற்போது அர்ஜுன்தாஸ் நடிப்பில் அநீதி என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இதையடுத்து வசந்தபாலன் வெப் தொடர் ஒன்றை இயக்குகிறார். ராதிகாவின் ராடன் நிறுவனம் ஸீ5 ஓடிடி தளத்துக்காக இதனை தயாரிக்கிறது. இந்த வெப் தொடர் அரசியலை அடிப்படையாகக் கொண்டு தயாராவதாக கூறப்படுகிறது. ஸீ5 தமிழில் திரைப்படங்கள், வெப் தொடர்கள் என அதிகளவில் தயாரிக்கிறது. அதன் ஒரு பகுதியாக இப்போது வசந்தபாலனையும் தங்களுடன் இணைத்துக் கொண்டிருக்கிறது.

ராதிகா சரத்குமாரின் ராடன் நிறுவனம் தொலைக்காட்சி தொடர்கள், திரைப்படங்கள் என தயாரித்து வந்தது. சில படங்கள் நஷ்டமடைய படத்தயாரிப்பை தற்காலிகமாக நிறுத்தியவர் இப்போது ஓடிடி தளத்துக்கு வந்துள்ளார். வசந்தபாலன் வெப் தொடரை இயக்குவதும், தலைமைச் செயலகம் என்ற பெயரும் நிறைய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

இந்தியாவை பொறுத்தவரை இந்தி வெப் தொடர்கள் சர்வதேச அளவில் கவனிக்கப்படுகின்றன. தமிழில் நவம்பர் ஸ்டோரி, விலங்கு என இப்போதுதான் முதல்படியை எடுத்து வைத்திருக்கிறோம். வசந்தபாலன் போன்றவர்கள் இதனை அடுத்தத் தளத்துக்கு கொண்டு செல்வார்கள் என எதிர்பார்க்கலாம்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com