தமிழ் சினிமாவின் காமெடி ஜானரில் படங்கள் இயக்கும் இயக்குனர்கள் சிலரே. அதில் முக்கியமானவர் எம். ராஜேஷ். அவர் இயக்கத்தில் வெளியானபடங்கள் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றன.
ஆனால் ராஜேஷ் இயக்கத்தில் கடைசியாக வெளியான சிவகார்த்திகேயன் நடித்த மிஸ்டர் லோக்கல் உள்ளிட்ட படங்கள் பெரும் தோல்வியைத் தழுவின. எனவே ராஜேஷ் ஒரு கம்பேக் படம் கொடுக்க வேண்டிய அவசியத்தில் உள்ளார்.
ஜெயம் ரவி நடிப்பில் ராஜேஷ் புதிய படம் இயக்க இருப்பதாகக் சில மாதங்களுக்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இந்தப் படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு ஹாரிஸ் கம்பேக் கொடுப்பதால் அவரது ரசிகர்களை உருசகமாகியுள்ளனர். ஸ்க்ரீன்சீன் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிகின்றனர்.
தற்போது இந்தப் படத்தில் நடிகை பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
டாக்டர் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகியுள்ள ப்ரியங்கா மோகன், அதையடுத்து சூர்யா உடன் எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்தார்.
தற்போது சிவகார்த்திகேயன் உடன் இரண்டாவது முறையாக டான் படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் ஜெயம் ரவி உடன் ஜோடி சேர இருப்பதாகக் கூறப்படுகிறது.