பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் பிரியங்கா சோப்ரா. இவர், பாடகர் நிக் ஜோன்ஸ் என்பவரை கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகும் படங்களிலும், நடித்து வரும் பிரியங்கா கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வாடகைத் தாய் மூலம் தனது முதல் குழந்தையை பெற்றெடுத்தார்.
குழந்தையின் புகைப்படத்தை இதுவரை வெளியிடாமல் இருந்து வந்தார். 100 நாட்கள் ஐசியூவில் இந்நிலையில், குழந்தை பிறந்து 100 நாட்களுக்கு பின், முதன் முறையாக குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்.
இதுகுறித்து உருக்கமாக அவர் வெளியிட்டு இருக்கும் பதிவில், ரோலர் கோஸ்டர் அனுபவத்தை போல், கடந்த சில மாதங்களாக நாங்கள் எதிர்கொண்ட சிலவற்றை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.
பிறந்து 100 நாட்களுக்கு மேல் ஐசியூ-வில் சிகிச்சை பெற்று வந்த எங்களது குழந்தை தற்போது எங்களது வீட்டிற்கு வந்துள்ளது. ஒவ்வொரு குடும்பத்தின், பயணமும் தனித்துவமானது. எங்களுக்கும் கடந்ந்த சில மாதங்களாக சாவல்கள் நிறைந்ததாக இருந்தது.
எங்கள் குழந்தை வீட்டிற்கு வந்துள்ள மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இந்த தருணத்தில் அவருக்கு சிகிச்சை அளித்த அனைத்து மருத்துவர்கள், நர்சுகளுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.
அம்மா, அப்பாவாக எங்களது புதிய அத்தியாயம் தொடங்கிவிட்டது. என்னை அம்மா ஆக்கிய நிக் ஜோனாஸுக்கு எனது நன்றி, லவ் யூ என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.