16 வருடம் கழித்து ரம்யா கிருஷ்ணனுக்கு கிடைத்த பாராட்டு

16 வருடம் கழித்து  ரம்யா கிருஷ்ணனுக்கு கிடைத்த பாராட்டு

நகைச்சுவை நடிகர் சோ எதையும் வெளிப்படையாக பேசக்கூடியவர். எம்ஜிஆர், சிவாஜி காலகட்டத்தின் அவர்களுடன் இணைந்து தனது சாதுரியமான நடிப்பை சோ வெளிக்காட்டி இருந்தார். தனது துக்ளக் தர்பார் என்ற பத்திரிக்கையின் மூலம் பல அரசியல் தலைவர்களை ஆட்டிப்படைத்தவர்.

சோ சகோதரியின் மகள் தான் நடிகை ரம்யா கிருஷ்ணன். ஆரம்பத்தில் ரம்யா கிருஷ்ணன் சினிமாவில் நடிக்க வருவது சோவுக்கு பிடிக்கவில்லையாம். இதனால் இவர்களுக்குள் பல கருத்து வேறுபாடுகள் இருந்துள்ளது. இதை ரம்யா கிருஷ்ணன் ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

ரம்யா கிருஷ்ணன் தமிழ் சினிமாவில் பல அற்புதமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். இவர்களுடைய 13 வயதிலேயே சினிமாவுக்கு வந்துவிட்டார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் ஆகிய மொழி படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். பாகுபலி படத்தில் இவரது சிவகாமி தேவி கதாபாத்திரம் மூலம் உலகம் முழுவதும் ரம்யா கிருஷ்ணன் பிரபலமடைந்தார். இந்நிலையில் கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், சௌந்தர்யா ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் படையப்பா.

இப்படத்தில் ரம்யா கிருஷ்ணனின் நீலாம்பரி கதாபாத்திரம் அனைவராலும் பாராட்டப்பட்டது. படையப்பா படத்தை ரஜினிகாந்துடன் சேர்ந்து சோ பார்த்துவிட்டு ரம்யா கிருஷ்ணனை கூப்பிட்டு பாராட்டியுள்ளார். சோ தனது வழக்கமான பாணியில் நைஸ் மேடம் கூறியுள்ளார். மேலும் இது போன்ற நல்ல கதாபாத்திரங்கள் மற்றும் நல்ல கதையை தேர்ந்தெடுத்து நடிக்குமாறு கூறியுள்ளார்.

அந்த நாளை என்னால் மறக்கவே முடியாது என சோ இறந்ததற்குப் பிறகு தன் நினைவுகளை ரம்யா கிருஷ்ணன் பகிர்ந்து கொண்டார்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com