மெகா ஸ்டார் சிரஞ்சீவி -சல்மான் கான் இருவரையும் திரையில் நடனமாட வைக்கும் பிரபுதேவா

மெகா ஸ்டார் சிரஞ்சீவி -சல்மான் கான் இருவரையும் திரையில் நடனமாட வைக்கும் பிரபுதேவா

இயக்குநர் மோகன் ராஜா இயக்கத்தில் தயாராகி வரும் 'காட்பாதர்' படத்திற்காக அப்படத்தின் நாயகன் 'மெகா ஸ்டார்' சிரஞ்சீவி மற்றும் பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான்கான் இணைந்து நடனமாடும் நாட்டியத்தை 'நடனப்புயல்' பிரபுதேவா வடிவமைக்கிறார். இதற்கான பிரத்யேக பாடலை உருவாக்கி வருவதாக இசையமைப்பாளர் எஸ். எஸ். தமன் தன்னுடைய ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார்.

கொனிடேலா புரொடக்சன்ஸ் மற்றும் சூப்பர் குட் பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் திரைப்படம் 'காட்பாதர்'. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த திரைப்படத்தில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி கதையின் நாயகனாக நடிக்கிறார். அவருடன் பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

சிரஞ்சீவி மற்றும் சல்மான்கான் இருவரும் இணைந்து திரையில் நடனமாடினால் ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக இருக்கும் என்பதால், இவர்கள் இருவரும் இணைந்து நடனமாடும் வகையில் பாடல் ஒன்றை உருவாக்க படக்குழுவினர் திட்டமிட்டனர். இவர்களுக்கு சிறப்பான நடனத்தை உருவாக்க நடனப்புயல் பிரபுதேவா நடன இயக்குநராக ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். இந்த பாடலுக்கு எஸ். எஸ். தமன் இசை அமைக்கிறார்.

விரைவில் இந்தப் பாடலுக்கான படப்பிடிப்பு நடைபெறவிருக்கிறது என்றும், சிரஞ்சீவியும், சல்மான்கானும் திரையில் ஒன்றாக நடனமாடுவதை பார்ப்பது ரசிகர்களுக்கு அரிய விருந்தாக இருக்கும் என்றும் படக்குழுவினர் உற்சாகமாக தெரிவித்திருக்கிறார்கள்.

இதுதொடர்பாக இசையமைப்பாளர் தமன் தன்னுடைய ட்விட்டரில் பதிவிட்டிருப்பதாவது...'' அரங்கமே அதிரும் வகையில் பிரபுதேவாவின் நாட்டிய வடிவமைப்பில், மெகா ஸ்டார் சிரஞ்சீவி அவர்களும், பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான்கான் அவர்களும் இணைந்து நடனமாட இருக்கிறார்கள்.

திரையில் காணும்போது ரசிகர்களின் உற்சாகம் கரை புரளும்'' என பதிவிட்டு இருக்கிறார். அத்துடன் இயக்குநர் மோகன் ராஜா, நடன இயக்குநர் பிரபுதேவா, மெகா ஸ்டார் சிரஞ்சீவியுடன் தமன் இருக்கும் புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com