பார்த்திபனின் இரவின் நிழல் சிங்கிள் பாடல் வெளியானது

பார்த்திபன் இயக்கும் புதிய படம் 'இரவின் நிழல்'. ஒரே ஷாட்டில் உருவாகி வரும் இந்தப் படத்தில் அவரே நடித்தும் இருக்கிறார். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
இரவின் நிழல்
இரவின் நிழல்

'இரவின் நிழல்' மோஷன் போஸ்டர் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடையே கவனம் ஈர்த்தது. இதற்கிடையே சில தினங்களுக்கு முன்பு இரவின் நிழல் படத்தை ஒரு ஸ்பெஷல் ஷோவாக பார்த்திபன் அவருடைய நண்பர்களுக்கு போட்டு காட்டினார். படத்தை பார்த்த அனைவரும் பாராட்டு தெரிவித்துவருகின்றனர்.

இரவின் நிழல் படத்தின் முதல் சிங்கிள் பாடல் இன்று வெளியானது. மாயவா மாயவா என்று தொடங்கும் பாடலை ஸ்ரேயா கோஷல் பாடியிருக்கிறார். த்வானி நிறுவனம் சார்பில் இப்பாடல் வெளியிடப்பட்டது.

இந்த விழாவில் ஏ.ஆர். ரஹ்மானுக்கு அவரது தந்தை, தாய் உருவம் பதித்த நினைவுப் பரிசை பார்த்திபன் வழங்கினார். மேலும், இவ்விழாவில் இயக்குநர்கள் சசி, எழில், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com