என் ஸ்கூட்டரை காணவில்லை : சின்னத்திரை நடிகை மணிமேகலை புகார் !!

பிரபல சின்னத்திரை நடிகை மணிமேகலை தங்களுடைய விலையுர்ந்த இருசக்கர வாகனம் திருடு போய்விட்டதாக சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.
என் ஸ்கூட்டரை காணவில்லை :  சின்னத்திரை நடிகை மணிமேகலை புகார் !!

சின்னத்திரை நடிகை மணிமேகலை தங்களுடைய விலையுர்ந்த இருசக்கர வாகனம் திருடு போய்விட்டதாகவும், திருமணத்துக்கு பின்னர் மிகவும் கஷ்டப்பட்டு வாங்கிய இருசக்கர வாகனம் என மணிமேகலை உருக்கமாக தெரிவித்துள்ளார்

மணிமேகலை சின்னத்திரை நடிகையாகவும் பல தனியார் தொலைக்காட்சிகளில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளினியாகவும் கடந்த 10 வருடங்களுக்கு மேல் பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் தனது சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிரம் பக்கத்தில் , கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக தனது கணவரின் விலை உயர்ந்த இருசக்கர வாகனம் KTM Bike திருடு போய்விட்டதாக பதிவிட்டுள்ளார்.

மேலும் திருமணத்திற்கு பின்னர் மிகவும் கஷ்டப்பட்டு இந்த இரு சக்கர வாகனத்தை வாங்கியதாகவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மணிமேகலையின் குடும்ப நண்பரான அரவிந்த் என்பவருடைய வீடு அசோக் நகரில் உள்ளது. கடந்த இரண்டு தினங்களாக அரவிந்த், மணிமேகலையின் கணவரின் வாகனத்தை ஓட்டி வந்திருக்கிறார்.

இந்த நிலையில் வீட்டு முன்பாக நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம் திருடு போய்விட்டதாக அரவிந்த், அசோக் நகர் காவல் நிலையத்தில் மணிமேகலையின் சார்பாக புகார் அளித்துள்ளார். இதுகுறித்து அசோக்நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com