"கம்பெனி" திரைப்பட குழுவினருக்கு அமைச்சர் துரைமுருகன் பாராட்டு

அமைச்சர் துரைமுருகன்
அமைச்சர் துரைமுருகன்
கம்பெனி
கம்பெனி

சமுதாயத்தில் புரையோடிக் கொண்டிருக்கிற பல கீற்றுகளின் ஒரு கீற்றை எடுத்து வைத்துக் கொண்டு அதற்கு உயிரோட்டம் கொடுத்திருக்கிறார்கள் என "கம்பெனி" திரைப்பட குழுவினருக்கு அமைச்சர் துரைமுருகன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இயக்குநர் தங்கராஜ் இயக்கத்தில் "கம்பெனி" என்ற திரைப்படம் அடுத்த மாதம் வெளியாக உள்ளது.

இந்த படத்தை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நுங்கம்பாக்கத்தில் உள்ள 4 Frames-இல் பிரேவியூ ஷோ பார்த்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சமுதாயத்தில் புரையோடிக் கொண்டிருக்கிற பல கீற்றுகளின் ஒரு கீற்றை எடுத்து வைத்துக் கொண்டு அதற்கு உயிரோட்டம் கொடுத்திருக்கிறார்கள் கதையில்.

மேலும் படத்தில் நடித்தவர்கள் எல்லாம் புதியவர்கள் ஆனாலும் புதியவர்களுக்கு உரிய அச்சமோ, பயமோ இல்லாமல் பழைய நடிகர்களைப் போல் நடித்திருப்பது பாராட்டத்தக்கது என்றும் பேசினார்.

அதனைத் தொடர்ந்து பேசிய அவர் முதல் பகுதியைவிட இரண்டாவது பகுதி விறுவிறுப்புடன் இருந்தது என்றும் அடுத்த என்ன நடுக்கும் என்றும் எதிர்பார்ப்பை தூண்டியதாகவும் அது தான் ஒரு சினிமாவுக்கு வெற்றி எனவும் அந்த வெற்றியை இந்தப் படம் நிச்சயம் தரும் என குறிபிட்டார்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com