கல்யாணம் என்றாலே பதற்றம் வருகிறது - ஸ்ருதிஹாசன்

கல்யாணம் என்றாலே பதற்றம் வருகிறது - ஸ்ருதிஹாசன்

தென்னிந்திய மொழிப்படங்களான தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஸ்ருதிஹாசன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனது சினிமா மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

அதில்,"எனது பெற்றோரிடம் உள்ள நல்ல விஷயங்களை மட்டுமே பார்த்து வளர்ந்துள்ளேன். எனது பெற்றோர்களின் மண வாழ்க்கை சரியாக அமையாத காரணத்தால் அவர்கள் பிரிந்தனர். இதை பார்த்ததால் திருமணம் என்ற சடங்கு, சம்பிரதாயங்களை வேண்டாம் என நினைக்கவில்லை. ஒரு வேளை அவர்கள் மண வாழ்க்கை நன்றாக அமைந்திருந்தால் சிறந்த ஜோடியாக இருந்திருப்பார்கள் என்றார்.

சாந்தனு ஹஸரிக்கா என்பவரை டேட்டிங் செய்து வருவது பற்றி ஸ்ருதியிடம் கேட்டபோது, "தற்போது திருமணம் என்பது பற்றி நினைத்தாலே பதற்ற உணர்வு உண்டாகிறது. எனவே அதைப் பற்றி யோசிக்கவே இல்லை. இதனால் ஏற்படும் சரிவுகளையும் சந்திக்க தயாராக இல்லை" என்றார்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com