என் மகள்களின் வரவுக்காக காத்திருக்கிறேன் : இசையமைப்பாளர் டி.இமான் நெகிழ்ச்சி பதிவு !!

 என் மகள்களின் வரவுக்காக காத்திருக்கிறேன்  : இசையமைப்பாளர் டி.இமான் நெகிழ்ச்சி பதிவு !!

தமிழின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான டி. இமான் சமீபத்தில் தனது மனைவியை பிரிந்தார். இதனையடுத்து அவர் அமலி என்பவரை மறுமணம் செய்திருக்கிறார். தன் மறுமணம் குறித்து டி. இமான் தனது முகநூல் பக்கத்தில் நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், “கடந்த ஞாயிற்றுக்கிழமை, மறைந்த பிரபல கலை இயக்குனர் உப்லாட் என்பவரின் மகள் அமலியை நான் மறுமணம் செய்துள்ளேன். எனது வாழ்வின் கடினமான தருணங்களிலும் எனக்கு மிகப்பெரிய பலமாக இருந்த எனது தந்தை கிருபாகர தாஸுக்கு, எப்போதும் கடமைப்பட்டுள்ளேன்.

இந்தத் திருமணம், முழுக்க முழுக்கவே குடும்பத்தினர் ஏற்பாடு செய்த திருமணம்தான். கடந்த சில வருடங்களாக எனக்கும் எனது குடும்ப உறுப்பினர்களுக்கும் ஏற்பட்ட அனைத்து சவால்களுக்கும் இந்த திருமண ஏற்பாடு முக்கிய தீர்வாக இருக்கும்.

அந்தவகையில், இந்த திருமணத்தை ஏற்பாடு செய்து, அமலியை எனக்கு அறிமுகப்படுத்திய என் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் நான் என் நன்றியை உரித்தாக்குகிறேன்.

அமலியின் மகளான நேத்ரா, இனி எனது மூன்றாவது மகள். நேத்ராவின் தந்தையாக இருப்பது, அளவிலாத மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது. எனது இந்தத் திருமணத்தில், எனது மகள்கள் வெரோனிகா மற்றும் பிளெஸிக்காவால் கலந்துகொள்ளவில்லை.

அவர்களை இத்தருணத்தில் பெரிதும் மிஸ் செய்கிறேன். அவர்கள் என்னிடம் விரைவில் வருவதற்காக, பொறுமையுடன் காத்திருக்கிறேன். அவர்கள் இருவருக்கும் நான், என் மனைவி அமலி மற்றும் எங்கள் மகள் நேத்ரா, எங்கள் உறவினர்கள் என அனைவரும் எங்கள் அன்பை கொடுக்க காத்திருக்கிறோம் என குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com