லெஜண்ட் சரவணன் நடிக்கும் ’தி லெஜண்ட்’ படத்தின் பிரம்மாண்ட டிரைலர் & இசை வெளியீட்டு விழா

லெஜண்ட் சரவணன் நடிக்கும் ’தி லெஜண்ட்’ படத்தின் பிரம்மாண்ட டிரைலர் & இசை வெளியீட்டு விழா

தி லெஜண்ட் நியூ சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் முதன் முறையாக மிகுந்த பொருட்செலவில் மிக பிரமாண்டமான முறையில் பன்மொழி பான் இந்தியா படம் ஒன்றை தயாரித்து வருகின்றனர். 'தி லெஜன்ட்' என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த படத்தின் கதாநாயகனாக லெஜண்ட் சரவணன் நடிக்கிறார்.

'தி லெஜண்ட்’ படத்தின் கதை திரைக்கதையை எழுதி இயக்குகிறார்கள் ஜேடி-ஜெர்ரி. இளமை ததும்பும் இசையை ஹாரிஸ் ஜெயராஜ் வழங்கியுள்ளார். இப்படத்தின் முதல் லிரிக்கல் பாடல் ’மொசலோ மொசலு’-வை பிரபல இயக்குநர்கள் மணிரத்னம், ராஜமெளலி மற்றும் சுகுமார் வெளியிட்ட நிலையில், ஒரு கோடிக்கும் அதிகமான பார்வைகள் மற்றும் பாராட்டுகளை பாடல் கடந்து மாநகரம் முதல் கிராமம் வரை ஹிட் அடித்துள்ளது. பா விஜய் பாடல் வரிகளை இயற்ற, அர்மான் மாலிக் பாடியுள்ளார்.

ராஜு சுந்தரம் நடனம் அமைத்துள்ள ‘மொசலோ மொசலு’ பாடலில் பிக் பாஸ் பிரபலம் யாஷிகா ஆனந்த் உள்ளிட்டோருடன் தோன்றும் லெஜண்ட் சரவணனன், தனது நடன அசைவுகளால் அனைவரையும் கவர்ந்துள்ளார்.

அதைத் தொடர்ந்து, இப்படத்தின் இரண்டாம் பாடலான பென்னி தயாள் மற்றும் ஜொனிதா காந்தி பாடி கவிஞர் சினேகன் எழுதிய 'வாடி வாசல்' சமீபத்தில் வெளியிடப்பட்ட நிலையில் ஒரு கோடி பார்வைகளை கடந்து வெகுவாக ரசிக்கப்பட்டு வருகிறது.

இந்த இரண்டு பாடல்களின் வெற்றிக்கு மகுடம் சூட்டும் வகையில், 'தி லெஜண்ட்’ படத்தின் பிரமாண்ட இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் வரும் ஞாயிறு (மே 29) அன்று நடைபெறவுள்ளது.

படத்தில் பணியாற்றிய நட்சத்திரங்களோடு பிரபல நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் கலந்து கொள்ளும் இந்த விழாவில் பூஜா ஹெக்டே, தமன்னா, ஹன்சிகா, நுபுர் சனோன, ஷ்ரத்தா ஶ்ரீநாத், ஶ்ரீ லீலா, டிம்பிள் ஹயாதி, ராய் லட்சுமி, ஊர்வசி ரவுத்தலா உள்ளிட்ட முன்னணி அகில இந்திய நடிகைகள் பங்கேற்க உள்ளனர்.

தனி பாடல் மூலம் உலகமெங்கும் பிரபலமான மும்பை மாடல் ஊர்வசி ரவுத்தலா தி லெஜன்ட் திரைப்படத்தின் வாயிலாக கதாநாயகியாக தமிழில் அறிமுகமாகிறார். தங்கள் தனி திறமையால் முத்திரை பதித்து அனைத்து மொழியிலும் பிரபலமான தொழில்நுட்ப கலைஞர்கள் ‘தி லெஜண்ட்’ படத்தில் லெஜெண்ட் சரவணனுடன் இணைந்து பணியாற்றியுள்ளனர்.

எமோஷன், ஆக்ஷன், காதல், காமெடி என அனைத்தும் ஒருங்கிணைந்த ஒரு பக்கா கமர்சியல் மாஸ் படமாக பான் இந்தியா அளவில் 5 மொழிகளில் வெளியாகவுள்ளது தி லெஜண்ட் சரவணன் நடிக்கும் ’தி லெஜண்ட்’.

விஜயகுமார், பிரபு, நாசர், சுமன், தம்பி ராமையா, ரோபோ சங்கர், மயில்சாமி, ஹரிஷ் பெரேடி, முனீஷ்காந்த், மன்சூர் அலிகான், ராகுல் தேவ், லிவிங்ஸ்டன், வம்சி கிருஷ்ணா, சிங்கம்புலி, லொள்ளு சபா மனோகர், அமுதவாணன், கே பி ஒய் யோகி, செல் முருகன், லதா, சச்சு, பூர்ணிமா பாக்யராஜ், கீத்திகா தேவதர்ஷினி, அய்ரா, தீபா ஷங்கர், மாஸ்டர் அஸ்வந்த் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஞாயிறு அன்று சென்னையில் நடைபெற உள்ள விழாவில் பான்-இந்தியா நட்சத்திரங்களின் இசை மற்றும் நடன நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com