மார்ச் 18 வெளியாகிறது குதிரைவால் திரைப்படம்

மார்ச் 18 வெளியாகிறது குதிரைவால் திரைப்படம்

இயக்குனர்பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ் தயாரித்த 'பரியேறும் பெருமாள்', 'இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு' ஆகிய படங்கள் பெரும் வெற்றி பெற்றன. இவற்றைத் தொடர்ந்து குதிரைவால்' படத்தினை யாழி நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளது. இயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரித்திருக்கும் குதிரைவால் திரைப்படம் மார்ச் 18 திரையரங்குகளில் வெளியாகிறது.

இயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் யாழி பிலிம்ஸ் தயாரித்திருக்கும் படம் குதிரைவால். கலையரசன், அஞ்சலிபாட்டில் நடித்திருக்கும் இந்த படத்திற்கு பிரதீப்குமார் இசையமைத்து உள்ளார். மனிதனின் நிகழ்கால உணர்வுகளும் கடந்தகாலம் மற்றும் எதிர்காலம் குறித்த கற்பனைகளும், கனவுகளும் அதன் தாக்கமும் மூலக்கூறுகளாக்கப்பட்ட திரைக்கதையால் இந்த படம் படமாக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முற்றிலும் புதிய முயற்சியாக குதிரைவால் படம் பார்வையாளர்களுக்கு புது அனுபவத்தை கொடுக்கும் என்கின்றனர் இந்த படத்தின் இயக்குனர்கள் மனோஜ், மற்றும் ஷியாம். இதுபோன்ற படங்கள் திரைப்படவிழாக்களிலும் , விருதுகளுக்காகவும் திரையிடப்படுவதுண்டு. முதல் முயற்சியாக பொதுமக்களுக்காக மார்ச் 18 முதல் தியேட்டரில் வெளியாகிறது என் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com