பீஸ்ட்டை மிஞ்சிய 'கே.ஜி.எப் 2' : மெய் சிலிர்க்க வைக்கும் யாஷ் !!

மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட கே.ஜி.எஃப் 2 திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில், விஜய்யின் பீஸ்ட் படத்துடன் பாக்ஸ் ஆபிஸில் மோதி வருகிறது.
பீஸ்ட்டை மிஞ்சிய 'கே.ஜி.எப் 2' : மெய் சிலிர்க்க வைக்கும் யாஷ் !!

கடந்த 2018ல் வெளியாகி, இந்தியா முழுவதும் ப்ளாக்பஸ்டர் ஹிட் அடித்த கே.ஜி.எஃப் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் இன்று வெளியாகியுள்ளது.

யாஷ் கதாநாயகனாக நடித்துள்ள இந்த திரைப்படத்தில், சஞ்சய் தத், பிரகாஷ் ராஜ், ரவீணா டாண்டன், ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை பிரசாந்த் நீல் இயக்கியுள்ளார்.

படம் குறித்து நடிகர் யாஷ் கூறுகையில், 'வாழ்க்கையில் பல துன்பங்களை அனுபவித்த ஒரு தாயின் கதை, தன் மகன் தன்னைப் போல் வாழக்கூடாது என்று விரும்புகிற கதைதான் கேஜிஎஃப். அவர் இறக்கும் போது அவர் பணக்காரராக இருக்க வேண்டும் என்று அந்த தாய் விரும்புகிறாள். இது முழு நாட்டிற்கும் பொருந்தக்கூடிய விஷயம் என்று கூறியுள்ளார்.

இதனிடையே இன்று படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பாக்ஸ் ஆபிஸில் தமிழின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான விஜய்யின் பீஸ்ட் படத்துடன் கேஜிஎஃப் 2 மோதி வருகிறது.

'கேஜிஎஃப் முதல் பாகம் முடியும் இடத்தில் இருந்து, இரண்டாம் பாகம் தொடர்கிறது. அருமையான திரைப்படம். நிறைய ட்விஸ்ட் மற்றும் திருப்பங்களைக் கொண்டுள்ளது.

இண்டர்வெல் காட்சிகள் ரசிகர்களை சிலிர்க்கச் செய்கின்றன. படத்தின் க்ளைமாக்ஸ் சமீப காலத்திய திரைப்படங்களில் பெஸ்ட் ஆக உள்ளது. திரையரங்குகளில் பார்க்க வேண்டிய அற்புதமான படம்' என மற்றொரு ரசிகர் பதிவிட்டுள்ளார். இரண்டாம் பாதி. ப்ளாக்பஸ்டர் ஹிட்' என இன்னொருவர் பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com