நடிகை பலாத்கார வழக்கில் சிக்கிய காவ்யா மாதவன் : அதிர்ச்சியில் மலையாள திரைத்துறை !!

நடிகை பலாத்கார வழக்கில் சிக்கிய காவ்யா மாதவன் : அதிர்ச்சியில் மலையாள திரைத்துறை !!

தென்னிந்தியாவின் பிரபல நடிகையை காரில் கடத்தி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் நடிகர் திலீப் குமாருக்கு உறுதுணையார் இருந்து செயல்பட்டதே அவரது இரண்டாவது மனைவி காவ்யா மாதவன் தான் என திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

நடிகை பலாத்காரம் கடந்த 2017ம் ஆண்டு மலையாளம், தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் நடித்து பிரபலமாக இருந்த நடிகை ஷூட்டிங் முடித்து விட்டு திரும்பும் போது அவரை காரில் கடத்தி பலாத்காரம் செய்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு தொடர்ந்து போலீசார் விசாரித்ததில் நடிகர் திலீப் தான் இதற்கு உடந்தை என்பது அம்பலமானது.

நடிகர் திலீப் கைது இந்த விவகாரம் தொடர்பாக நடிகர் திலீப்பின் செல்போன், லேப்டாப் உள்ளிட்டவற்றை சோதனை நடத்தி விசாரணை நடத்தியதில் நடிகர் திலீப்புக்கு எதிராக வலுவான சாட்சியங்கள் சிக்கிய நிலையில், நடிகர் திலீப் அதிரடியாக கைது செய்யப்பட்டார். அந்த வழக்கு கோர்ட்டில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

நிஷால் சந்திரா என்பவரை 2009ஆம் ஆண்டில் திருமணம் செய்த மலையாள நடிகை காவ்யா மாதவன் அடுத்த ஆண்டே அவரை விவாகரத்து செய்தார். முதல் கணவரை விவாகரத்து செய்த நிலையில், நடிகர் திலீப்பை கடந்த 2016ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். தனது முன்னாள் தோழியான அந்த நடிகையை பழிவாங்கும் நோக்கத்தோடு காவ்யா மாதவன் போட்டு கொடுத்த திட்டத்தின்படியே திலீப் ஆட்களை வைத்து செய்ததாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

நடிகையை பாலியல் பலாத்காரம் செய்வது தொடர்பாக காவ்யா மாதவன் பேசிய ஆடியோ ஆதாரம் போலீசாரிடம் தற்போது சிக்கியுள்ளது மலையாள திரையுலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. வரும் திங்கட்கிழமை ஏப்ரல் 11ம் தேதி இது தொடர்பாக நடிகை காவ்யா மாதவனிடம் போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com