"ரைட்டு... உண்மைய அப்புறம் சொல்றேன்" : கார்த்திக் நரேன்..

இயக்குனர் கார்த்திக் நரேன் அவருடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டிருந்தது பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
"ரைட்டு... உண்மைய அப்புறம் சொல்றேன்" : கார்த்திக் நரேன்..

நடிகர் தனுஷின் 43-வது படம் ‘மாறன்’. துருவங்கள் பதினாறு, மாஃபியா, நரகாசுரன் உள்ளிட்ட படங்களை இயக்கிய கார்த்திக் நரேன் இப்படத்தை இயக்கியிருந்தார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருந்த இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்திருந்தார். மேலும் ஸ்மிருதி வெங்கட், சமுத்திரக்கனி, கிருஷ்ணகுமார், மகேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தது.

இப்படம் குறித்து சமூக வலைத்தளத்தில் பல விவாதங்கள் நடந்துவந்த நிலையில் படத்தின் இயக்குனர் கார்த்திக் நரேன் அவருடைய சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருந்தது பெரும் பேசுப்பொருளாகியுள்ளது. அதில், "ரைட்டு... உண்மைய அப்புறம் சொல்றேன்" என குறிப்பிட்டிருந்தார். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை கிளப்பியது. இந்த பதிவிற்கு மாறன் படத்தின் கதையில் நடிகர் தனுஷின் தலையீடு இருந்ததால், படத்தின் விமரசனங்கள் எதிர்மறையாகியுள்ளதாக இந்த பதின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார் என்று பலர் பதிவிட்டு வருகின்றனர்.

பல விவாதங்களான பிறகு அந்த பதிவை இயக்குனர் கார்த்திக் நரேன் சமூக வலைத்தளத்தில் இருந்து நீக்கியுள்ளார். இருந்தும் அந்த உண்மையை சொல்லுங்கள் என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com