
ஹாட் ஸ்டாரில் வரும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி இருபத்தி நான்கு மணி நேரமும் ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கும் இந்த நிகழ்ச்சியில் நடக்கும் சம்பவங்கள் அனைத்தும் பார்வையாளர்களை அதிக அளவில் கவர்ந்து வருகிறது. அதில் நேற்று பிக்பாஸ் வீட்டில் வைக்கப்பட்டிருந்த பணப்பெட்டியை எடுப்பதற்கான போட்டி ஜூலி மற்றும் ஸ்ருதி இருவருக்கும் நடைபெற்றது. அப்படி நடந்த கடுமையான போட்டியில் சுருதி வெற்றி பெற்று 15 லட்ச ரூபாய் பணத்தை கைப்பற்றினார்.
அவருக்கு ஈடாக கடினமாக முயற்சி செய்து விளையாடிய ஜூலியை தற்போது ரசிகர்கள் அனைவரும் பாராட்டி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் பிக் பாஸ் வீட்டில் ஆரம்பகட்ட நாள் முதலே ஜூலிக்கு எதிராக பல வேலைகளை போட்டியாளர்கள் செய்து வந்தனர். ஏனென்றால் பிக் பாஸ் வீட்டில் ரம்யா பாண்டியன், ஸ்ருதி ஆகியோர் மிகவும் கவர்ச்சியான உடையை அணிகின்றனர். அப்படி இருக்கும்போது ஜூலியை மட்டும் மட்டம் தட்டிப் பேசுவது எந்த விதத்தில் நியாயம் என்று தற்போது சோஷியல் மீடியாவில் அவருக்கு ஆதரவாக கருத்துக்கள் வெளியாகி வருகிறது
இவ்வளவு எதிர்ப்புகள், தடைகள் இருக்கும் போதும் அதை ஜூலி கையாளும் விதமும் அனைவரையும் பாராட்ட வைத்துள்ளது. தற்போது ஜூலி செய்யும் அனைத்து செயல்களிலும் ஒரு முதிர்ச்சி இருக்கிறது. தனக்கு கொடுக்கப்பட்ட இந்த இரண்டாவது வாய்ப்பை அவர் மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொள்கிறார். எனவே இந்த பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் இறுதி போட்டியாளராக செல்வதற்கு ஜூலி மிகவும் தகுதியானவர். ஓவியாவுக்கு ஆதரவாக ஜூலியை விமர்சனம் செய்த ரசிகர்கள் தற்போது ஜூலிக்கு ஆதரவு அளித்து அவரை பாராட்டி வருகின்றனர். இதுவே ஜூலிக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி.