இன்று வெளியாகிறது ஜாலியோ ஜிம்கானா வீடியோ சாங்

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்த படம் பீஸ்ட். சன் பிக்சர்ஸ் தயாரித்த இப்படத்தில் பூஜா ஹெக்டே, செல்வராகவன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். அனிருத் இசையமைத்திருந்தார்.
ஜாலியோ ஜிம்கானா வீடியோ சாங்
ஜாலியோ ஜிம்கானா வீடியோ சாங்

கடந்த ஏப்ரல் 13ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியான பீஸ்ட் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. பீஸ்ட் படத்தின் ரிசல்ட்டால் அப்செட்டான சன் பிக்சர்ஸ், ரஜினி படத்தை இயக்கும் பொறுப்பிலிருந்து நெல்சனை நீக்கிவிட்டதாகவும் தகவல் வெளியானது. ஆனால் அது வெறும் புரளி என்று பின்னர் தெரியவந்தது.

இந்நிலையில் பீஸ்ட் படத்தில் இடம்பெற்ற “ஜாலியோ ஜிம்கானா” பாடலின் வீடியோ இன்று வெளியாக இருக்கிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com