இயக்குனர் ஷங்கர் இயக்கிய 'பாய்ஸ்' திரைப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமான நடிகர் சித்தார்த். அதன் பிறகு ஆயுத எழுத்து, 180, காதலில் சொதப்புவது எப்படி, உதயம், தீயா வேலை செய்யணும் குமாரு, ஜிகர்தண்டா, உள்பட பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.
ஆளும் கட்சியாக இருந்தாலும் எதிர்க்கட்சியாக இருந்தாலும் சமூக வலைதைளங்களில் தனது கருத்துகளை முன் வைக்கும் வழக்கத்தை உடையவர் நடிகர் சித்தார்த். இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் நல்ல கேரக்டர்கள் கிடைக்கவில்லை என்றால் தான் சினிமாவில் இருந்து விலகப் போவதாக தெரிவித்துள்ளார். அவருடைய இந்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில வருடங்களாக சித்தார்த் நடித்த படங்கள் வெற்றி பெறாத நிலையில் அவர் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. சினிமாவில் இருந்து விலகி அவர் சொந்த பிசினஸ் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.