தனுஷுடன் இணைகிறாரா பிரியங்கா மோகன்?

ப்ரியங்கா மோகன்
ப்ரியங்கா மோகன்

சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் என்ட்ரி கொடுத்தவர் நடிகை பிரியங்கா மோகன். இதனை தொடர்ந்து சூர்யா நடிப்பில் வெளிவந்த எதற்கும் துணிந்தவன், மீண்டும் சிவகார்த்திகேயனுடன் டான் ஆகிய படங்களில் நடித்திருந்தார். இதன்பின், நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள தலைவர் 169 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பிரியங்கா நடிக்கப்போவதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், முன்னணி நடிகர் தனுஷ் நடிக்கவிருக்கும், கேப்டன் மில்லர் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்க பிரியங்கா மோகனிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னணி நடிகருக்கு ஜோடியாகும் நடிகை பிரியங்கா மோகன்.. முதல் முறையாக இணையும் ஜோடி சத்யஜோதி தயாரிப்பில் உருவாகும் இப்படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார். இவர் இதற்குமுன், ராக்கி, சாணி காயிதம் ஆகிய படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com